வரம்

உன் பெயர் சொல்லியே
உதடுகள்
உலரும் வரம் வேண்டும்..!!!

உன் வாசம் பட்டே
சுவாசம்
கொள்ளும் வரம் வேண்டும்..!!!

உன் கண் சிமிட்டலிலே
கன்னம்
சிவக்கும் வரம் வேண்டும்..!!!

உன் இதழ் புன்னகையிலே
இதயம்
பூப்பூக்கும் வரம் வேண்டும்..!!!

இறுதியில்
உன் மடி சாய்ந்தே
உயிர்
பிரியும் வரம் வேண்டும்..!!!

எழுதியவர் : முருகேஸ்வரி (19-Dec-13, 11:30 am)
Tanglish : varam
பார்வை : 97

மேலே