காதல் என்றால்

உன்னைப் பற்றிய
கனவுகளால்
என் வாழ்க்கை
அழகாகிறது!
*
கனவுகள்
நிஜமாகும்
நிமிடங்களில்
நானே அழகாகிறேன்!
*
முன்பெல்லாம்
கவிதை எழுத
கற்பனை செய்வேன்
இப்போது
நீயே
என் கவிதையாகிறாய்!
*
சிலவேளை
மனதைத்
தைக்கிறாய்!
சிலவேளை
மனதால் தைக்கிறாய்!
எவருக்குமே தெரியாமல்
ஏற்படும் அந்தக் கணம்
இருவருக்கும் புரியாது!
*
நீண்டநாள் நட்பும்
நிமிடத்தில் காதலாகிறதே!
ஏனென்று
எவரென்று
எதுவும் அறியாது
உள்ளம் பறிபோகிறது!
சொன்னால் புரியாது
சுகப்பட்டால் முடியாது
*

தன்னை அறியாமல்
தடுமாறும்
ஜீவனையும்
கண்ணால் காணாமல்
காதல் வயப்படுத்தும்
என்ன காரணமோ
எதுவுமே இல்லாமல்
ஒன்றித்தான் போகிறது
உள்ளம்!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
ஊண் உறக்கம்
ஒன்றும் அறியாமல்
விழித்திருக்கும் பொழுதுகளில்
நினைவெல்லாம்
விருந்தாகும்!
*
நடந்தால்
அமர்ந்தால்
என்னைவிட
எவர் உளார்
என்ற கர்வம்
எனக்கே பிறக்கிறது
தானாய் உதிரும்
புன்னகை!
உதடுகள் உரசும்
ஆயிரம் வார்த்தைகள்
உணர்வுகள் அறியும்
அர்த்தங்கள்!
*
நீ
அருகில் இருந்தால்
உயிரும் வேண்டாம்
அன்பாய் கிடந்து
ஆயுள் வளர்ப்போம்!
*
எந்தன் நிலைமை
எவருக்கும் தெரியும்
காதல் என்றால்
யுகமாய் வாழ்வேன்!
என்னை நீயும்
உன்னை நானும்
அருகில் பார்த்து
அர்த்தம் தேடுவோம்
வாழ்க்கைக்கு!
*
இப்போதுதான்
நான்
உண்மையாகச் சிரிக்கிறேன்
உண்மையாக
அழுகிறேன்!
அதையும் கற்றுத்தந்தது
நீதான்!
*
உடல் உள்ளம்
முழுவதுமாய்
நீதான்
நிறைந்திருக்கிறாய்!
அருகில் இருந்து
அழைப்பவர் யாரோ
உன்னால் நானும்
நானாய் இல்லை
என்னைத் தேடி
அலைகிறது மனது
எழுந்து நடந்தால்
கொஞ்சு முகத்துடன்
புன்னகை சிந்துகிறாய்
பண்பாய் அணைத்து
பதமாய் பயணிக்க
வழிகாட்டுகிறாய்!
*
ஓ....
காதல் என்றால்
நீதான் உயிரே!
உலகம் வேண்டாம்
நீயே போதும்!

- விசு கருணாநிதி

எழுதியவர் : விசு கருணாநிதி (19-Dec-13, 5:19 pm)
Tanglish : kaadhal endraal
பார்வை : 101

மேலே