கரை இல்லா மனம்

நினைவுகளை பரப்பி வைத்து
தனக்கு பிடித்தவற்றை எடுத்து வைத்து..

பிடிக்காதவற்றையும்
ஓரிடத்தில் தள்ளி வைத்து..

காலத்தின் ஓட்டத்தில்
தேவையற்ற பலவற்றை தனக்குள்ளே சிதறவிட்டு..

கிடைக்கின்ற
தனிமைகளிலும்..

தனக்குள் இருக்கும்
நினைவுகளை நினைவுபடுத்தும் தருனங்களிலும்..

சட்டென்று எடுத்து
முடிந்தவரை அசைபோட்டு
சிரித்தும்.. அழுதும்.. தனக்குள் தவித்தும்.. புலம்பியும்..

அலை பாய்ந்து..

பின்பு
தனக்குத் தானே
ஆறுதல் கூறி.. அடங்கி அமைதிகொள்ளும்.. இந்த கரை இல்லா மனம்..

எழுதியவர் : வெ கண்ணன் (20-Dec-13, 12:47 am)
பார்வை : 82

மேலே