பறந்திட

தோல்வி இடிகளால் வந்த
மனச்சுவர் இடிபாடுகளின்
சுமையால்,
முதுகு வளைந்து
முன்னேறத் தவிக்கும்
மனிதனே,
அந்த
இடிபாடுகளையும் நீ
இறக்கையாக்கக் கற்றுக்கொள்,
பறக்கலாம்-
வெற்றி வானில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Dec-13, 2:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 49

மேலே