கந்தர்வன்

.இந்த கவிதையை என் கணவருக்கு சமர்ப்பிக்கிறேன்............

கந்தர்வன்......

தட்டு தடுமாறி கவிதை
எழுதும் பெண்ணினதில்லே
நானும் ஒருத்தி!

ஆனால்,
உனக்கான கவிதை என்றவுடன்
ஒவ்வொரு வார்த்தையும்
கள்ளியுடன் சுள்ளியும் பொறுக்கிறது!

உன்னை நினைத்தவுடன்
சிந்தனைக்கே இடமில்லாமல்
சிற்பிக்குள் உள்ள முத்தாக
சிதறுகிறது வார்த்தை என்னும்
சித்தாந்தம்!

உன் இதயம் என்னும்
சிறை என்னை வாழ
வைத்தது போலவே
உன் பணி தான்
எத்தனை எத்தனை
இதயங்களை துடிக்கவைக்கிறது!
அப்பப்பா!

கம்பன் வீட்டு கட்டுத்தறி
தான் கவிபாடும்!
ஆனால்,
உனக்காக என் வீட்டு
பூந்தோட்டமே கவிபாடுமே!

காரிருள் கொண்ட மேகங்கள்
கூட ஒருநாள் தன்னை
வெண்மேகங்களாக அல்லவா
புதுப்பித்து கொள்கிறது!

ஆனால் நீயோ!
உன் மனதில் காரிருள்
என்ற பேச்சுக்கே இடமில்லாமல்
எந்த காலமும் வெண்மேகமாக
படையெடுத்து திராணியுடன்
செயல்படுவது என்னை வியக்கவல்லவா
செய்கிறது!

ஒரு மனிதனுக்குள் இத்தனை
சிறப்பா என என்னும் போதே!

அட!
நாட்டுப்பற்றும்,சமுதாயஅக்கறையும்
சுதந்திர எண்ணமும் கூட அல்லவா
உன்னிடம் நிலைபெற்று இருக்கிறது!

என்னே ஒரு விந்தை!

சாது மிரண்டால் காடு
கொள்ளாது!
ஆனால்,
இந்த சாது மிரண்டால்
உலகமே கொள்ளாதே!

உன்னை நினைக்கும்
போதெல்லாம் என் மனம்
பூரித்து தான் போகிறது!

நீ என்னை திருமணம்
என்ற பந்தத்தில் இணைத்தது
முதல் "பெருமிதம்" என்ற ஒன்றை
மட்டுமே நிலைபெற செய்ததை
கண்டு பூரித்து தான் போனேன்

இப்படி!
எல்லா அதிசயமும் ஒரு
சேர இருக்கும் உன்னை
நான் எப்படி புகழாமல் இருப்பேன்!

உனக்கு நான் மறுதாயாக
இருப்பது கண்டு புல்லரித்து
தான் போகிறேன்!

மணாளனே மங்கையின்
பாக்கியம்!
நீயோ!
என் வாழ்வின் வாக்கியம்!


வாழ்நாள் முழுவதும்
நான் கேட்பது ஒன்றே!

அது "இறுதி வரை
இணைந்திரு" என்பதே!

இணைந்திரு மனமே!

எழுதியவர் : elakkiyam (20-Dec-13, 2:04 pm)
சேர்த்தது : ooviyan
பார்வை : 201

மேலே