பரிசளித்தேன் என் மன்னவனுக்கு,

நதியாக தொடங்கிய மணமகன் தேடல்
கடலாக சங்கமிக்க கரைசேர முடியாமல்
காற்றிலே இசைகிறேன் என்
திருமணத்தை ,
என்னுடன் அவன் செய்திடும் குறும்புகளை
கடல் அலையாக சொல்கிறேன் என்
தோழியின் கா(ல்)தோரம் ,
அந்திசாயும் நேரத்திலே என்னவன் என்னுடன்
ஊடல் கொண்டதை நான் உடுத்திய
நீல வானமும் சொல்லிடும்
செங்கதிரின் நிறங்களாக,
மணந்த வாழ்விலே பெற்றெடுத்தேன் அழகிய
மேகங்களை , நம் பிள்ளைகள் என்று
பரிசளித்தேன் என் மன்னவனுக்கு,
என்னவனை மரணம் தீண்டும் நிமிடம் என்
சோகங்களை புயலாக்கி, துன்பங்களை
மழையாய் பொழிந்து என் தாய் பூமியின்
மடியில் தவழ்கிறேன் உனக்கு முன்னால் ....