அகமும் சுகம் அடையும்

​இதயமெனும் வானிலே
எண்ணமெனும் முகில்கள்
​நாளும்கூடி கலைகிறது !

மாரியாய் பொழிகிறது
மடைதிறந்த வெள்ளமாகுது
மனம் மகிழும் வேளையிலே !

போராட்டம் சில நேரங்களில்
வெற்றியெனில் ஆனந்தமே
தோல்வியானால் துயரமே !

இரண்டும் ஒன்றே நமக்கு
முடிவல்ல அதுவே என்று
முடிவெடுத்தால் நலமே !

சுழன்றிடும் காலசக்கரம்
மாற்றிடும் சூழ்நிலையை
அகமும் சுகம் அடையும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Dec-13, 3:15 pm)
பார்வை : 77

மேலே