அவனுக்கு எதுவும் தெரியாது

அவன்...பிறக்கும்போதே...
தன் சாதிப் பெயரைச் சொல்லிக் கொண்டு
பிறந்தவன் இல்லை.
தன் இனப் பெருமை பேசிக் கொண்டு
பிறக்கவும் இல்லை.
உறவுகள்...யாரென்று அறிந்தவனும் இல்லை.
அவன்...தன் அம்மாவை அறிந்தது கூட...
அவள் தன்னை
அவனிடம் வெளிப்படுத்திய விதத்தில்தான்.

அவனுக்கு எதுவும் தெரியாது
அவன் இங்கே பிறக்கும் போது.
அவனுக்கு...
எல்லாமும் கற்றுத் தந்தவர்கள் நாம்தான்.
எந்தக் கடவுளும்...
அவனின் காதில் எதையும்
சொல்லிவிட்டுப் போகவில்லை.
அவன் நமக்குப் பயந்தவனாய் இருந்ததும்...
நம்மை அவன் பயமுறுத்தியதும்...
நாம் கற்றுக் கொடுத்த வழிகளால்தான்.

அதனால்தான் சொல்கிறேன்....
அவனை நாம் மன்னிக்கக் கற்றுக் கொண்டுவிடுவோம்.

ஏனெனில்...
அவன் எதையும் கற்றுக் கொண்டு...
இங்கு பிறக்கவே இல்லை.

எழுதியவர் : rameshalam (20-Dec-13, 4:48 pm)
பார்வை : 108

மேலே