வாழ்க்கை

நானும் தேடித்திரிந்தேன்
தேனெடுக்கத் தேடித்திரியும்
பட்டாம்பூச்சிகளைப் போல்

மலர்விட்டு மலர் போல
இடம் விட்டு இடம்
புரிபடவில்லை வாழ்கையில்
வசந்தமுள்ள பூக்கள்

அதைவிட இதுவும்
இதைவிட அதுவும்
சுவைஎன்று சுவைக்க விரும்பி
சோர்ந்தே போனேன்

புரியும் போது பிரிந்திருக்கும்
தேடும் போது தொலைந்திருக்கும்
காணும் போது மறைந்திருக்கும்
கூடும் போது கலைந்திருக்கும்

தேடி களைத்து எதிரில் இருக்கும் பூவை
போதுமென்ற மனதுடன் தொட்ட போது
உதிர்ந்து போனது
உன்னதமான வாழ்க்கைப்பூ

எழுதியவர் : பானு கே எல் (20-Dec-13, 10:19 pm)
பார்வை : 181

மேலே