பெண்ணீயம்
தீக்குளிப்புகள் சீதைகளுக்கு மட்டும் சொந்தம் எனில்
பெண்ணீயம் வெறும் பேச்சுக்களாகவே போகட்டும்!
வெறும்
புணரும் பொருட்களாய் அவர்களை கொள்வாய் எனில்
பெண்ணீயம் வெறும் பேச்சுக்களாகவே போகட்டும்!
அவளை மதிப்பிட அவள் அவயங்களை அளப்பாய் எனில்
பெண்ணீயம் வெறும் பேச்சுக்களாகவே போகட்டும்!
அன்பின் பால் அளிக்கும் அதிகாரத்தை
அடக்குமுறைகளாய் தொடுப்பாய் எனில்
பெண்ணீயம் வெறும் பேச்சுக்களாகவே போகட்டும்!
உயிர்சுமக்கும் கருப்பையை உலக்கை கொண்டு புரட்டும்
பேய்கள் இருக்கும் வரை
பெண்ணீயம் வெறும் பேச்சுக்களாகவே போகட்டும்!
பெண்ணீயம் வளர்க்க பெண்கள் குரல் தேவையில்லை
பெண்மையை புரிந்து , ஊக்கம் கொடுக்க ஆண் துணைகளாய்
அப்பாக்களும் தம்பிகளும் கணவனும் போதும்,
பெணீயம் தானாக வளர்ந்திடும்....
பெண்மை அகம் மகிழ்திடும்!
ஜகம் ஜெயித்திடும்!
பாரதியும் புன்னகைப்பான்......