அம்மா

மேஜையில் இருக்கும் கணினி மடியில்
மடியில் இருக்கும் மகள் மேஜையில்
உறங்குகிறாள் உமிழ்நீர் ஒழுகியபடி
அருகில் அன்பானவர்க்கு வெறும் "ஹாய்"
முன் பின் அறியாதவர்களுடம் " சாட்"
பொழுதுக்கும் ஹோட்டல்
பொழுதுபோக்காக சமையல்
இரவெல்லாம் வேலை
பகலெல்லாம் உறக்கம்
முற்றும் முரணாகி போன
நவீன நாளில்
மாறாதது இது மட்டும் தான்
அலைபேசியில் அம்மாவின் முதல் கேள்வி
" என்னடா சாப்பிட்டே?"