காதலில் பிரிவு
தொடும் தூரம்
நீ இருந்தாய் - உன்னை
தொட மறுத்தேன்
என்னை தர மறுத்தேன் - இன்று
தொலை தூரம் போயிருக்கிறாய்
நானோ இப்போது
உன்னை தொடும்
வரம் வேண்டுகிறேன்
உன் கை படும்
தீண்டும் இன்பம் தேடுகிறேன்
வெட்கம் விடும் நொடி
யாசிக்கிறேன்
நின் பக்கம் சேரும்
நம்பிக்கை சுவாசிக்கிறேன்...