மின் சேமிப்பு சிறு விளக்கம்
1. மின் சேமிப்பு என்றால் என்ன?
2. மின்சாரத்தை சேமிக்க முடியுமா?
3. சேமிப்பு என்பதை ஏன் வற்புறுத்துகிறார்கள்?
4. மின் உற்பத்தி குறைவாக ஏன் செய்கிறார்கள்?
5. பவர் கட் ஏன் வருகிறது ?
6. ஒரே அளவில் உற்பத்தி செய்து மீந்ததை
சேமித்து வேண்டும்பொழுது உபயோகிக்கலாமா?
எழுத்து தள நட்புகளின் சந்தேகங்களை போக்கு வதற்கு, இந்தக் கட்டுரை பதிப்பிக்கப் படுகிறது.
முதற்க்கண் மின் சேமிப்பு என்பதைப் பாப்போம்
மின்சாரத்தை மின்சாரமாகவே சேமிக்க இயலாது.
மின்சாரம் உபயோகத்தை குறைத்தால், அது தயாரிக்க ஆகும் இடுபொருள்ஆன கரியை(அல்லது நீர் மின்சாரம் ஆனால் நீரின் அளவை )குறைத்து, அதன் மூலமே சேமிப்பை அடையமுடியும்.
ஏனெனில் மரபு சார்ந்த மின் உற்பத்தி இன்னும் சிறிது காலமே நீடிக்கும்.
கரியும் எண்ணெய் வளமும் வெகு வேகத்தில்
குறைந்து வருகிறது. ஆதலால் மரபு சாரா சக்திகளான கிரீன் எனெர்சி எனப்படும் காற்றாலை மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி , என மாற்று தேடி வெற்றி பெரும் நிலையில் உள்ளோம் .
இயந்திர சக்தி மின்சக்தியாக மாற்றம் பெறும்போது
சில விதிகளை கணினி தீர்மானம் செய்கிறது.
நீங்கள் போடும் ஒவ்வொரு சுச்சும்தான் மின்சார
உற்பத்தியின் அளவை நிர்ணயம் செய்கிறது.
அதாவது நீங்கள் சுட்சை ஆன் பண்ணும் கால் வினாடிக்குள் மின் தேவை என்ன என்பதை கணக்கிட்டு,ஒரு வினாடியின் கால் பகுதிக்குள்
மிகச்சரியான விகிதத்தில் உற்பத்தி முடுக்கப்படும்.
(உற்பத்தி நிலையத்தில் அதிக பட்சம் வரையறை செய்யப்பட்டு செட் செயப்பட்டிருக்கும்.)
அதே போல் நீங்கள் ஆப் செய்யும் ஒவ்வொரு
உபகரணமும் மின் ஓட்டம் கண்காணிக்கப்பட்டு,
உற்பத்தி துல்லியமாகக் குறைக்கப்படும்.
இதனால் உற்பத்தியானதை உபயோகித்துதான்
ஆகவேண்டும் இல்லாவிட்டால் வீண் .
என்பதெல்லாம் மின் விதியை சரியாகப் புரிந்து
கொள்ளாதவர்களின் வீண் வாதம்.
ஆனால் காற்றாலை மின்சக்தி சிறிதாக
மின் உப விதிக்கு மாறுகிறது.மின்தேவை குறையும் போதும் காற்று இருந்தால் உற்பத்தியிலேயே
தொடர்ந்து இருந்து,அனல் மின்சாரப் பயன் பாட்டைக் குறைக்கும்.(கணினியின் உதவியால்)
சூரிய மின் சக்திக்கும் இது பொருந்தும்.
(நிபந்தனை என்னவென்றால் இயந்திரங்கள்
கிரிட் கநெட் ஆக இருக்க வேண்டும்.தனியார் மின்
உற்பத்திக்கு இது பொருந்தாது)
நீர் மின்சாரமோ pwd அறிவுறுத்தலில் எவ்வளவு
தண்ணீர் திறக்க அரசாங்க உத்தரவு உள்ளதோ ,
அந்த நீரைப்பயன் படுத்தி அதிக பட்சம் மின்சாரம்
உற்பத்தி செய்து விடுவார்கள் .
அப்போதும் உபரி மின்சாரம் வருமானால் (மழை காலம்) அனல் மின்சாரம் குறைக்கப்படும்.
பின் ஏன் மின் வெட்டு வருகிறது?
நமது உற்பத்தியை விட பல மடங்கு மின் தேவை
பல்கி பெருகுவதால் (டாயலேட் கும் ac போடுவதால் ) பற்றாக்குறை ஏற்பட்டு ,அதை
சமாளிக்க முடியாமல் குறைவை பங்கிட்டு மின் வெட்டு செய்கிறார்கள்.
உற்பத்தி இயலாத போது இதைதானே செய்யமுடிகிறது.
அப்படியானால் மின்சாரத்தை மின்சாரமாகவே
சேமிக்க முடியாதா?
நம் வீட்டில் உபயோகிக்கும் மின்சாரம்,230 வோல்ட்
அலைவு 50 hz கொண்டது.
அதை அப்படியே சேமிக்க இயலாது.அதற்காக
charger உபயோகப்படுத்தி நேர் மின்சாரமாக்கி ,
மின்கலங்களில் (பாட்டரி)சேமிக்கலாம்.ஆனாலும்
மீண்டும் இன்வர்ட்டர் வழியாக அலைவு மின்சாரம் பெறும்போது,கணிசமான மின் இழப்பு ஏற்படும்.
இதுவும் மிகப் பெரிய அளவில் செய்துவிட முடியாது. சரியான பயன் தராது.
எனவே நண்பர்களே ,நாடு நலம்பெற மின் சிக்கனம்
பின் பற்றுங்கள்.
கரியோ, எண்ணையோ தீர்ந்து விடும் போது,
கை கொடுப்பது,சூரிய ஒளி மின்சாரம்.
இரவு நேரத்தில் batery இல் சேமித்ததை திரும்ப இன்வர்டேரில் விட்டு பயன் படுத்திக்கொள்ளலாம்.
இன்றிலிருந்து மின் சிக்கனம் செய்தால் எரி பொருளின் ஆயுளை நீட்டித்து சந்ததிகளுக்கும்
மிச்சம் வைக்கலாம்.
ஒரு ஊநிட் மின்சார சேமிப்பானது
இரண்டு ஊநிட் உற்பத்திக்கு நிகரானது.
ஒரு மெகாவாட் உற்பத்தி நிலையம் அமைக்க
சுமார் 100 கோடிகள் மற்றும் காலம் 3 ஆண்டுகள்
குறைந்தபட்சம் ஆகும்.
சந்தேகங்களை கருத்துகளில் தெரிவியுங்கள்.
இன்னும் சொல்வேன்!