என்றோ எழுதிய கவிதைகள் 001
என்றோ எழுதிய கவிதைகள் 001
கரிமுகம் முன் நின்று
சிரமது தாழ்த்தி
வறியவன் நானொரு
வரம் கேட்டேன்
உழைக்கின்ற நாட்களிலே
ஊதியமோ போதவில்லை
நஞ்சில்லா நெஞ்சமிது
அஞ்சுவதேன் ஐங்கரனே
பூட்டிவைத்த நெஞ்சினிலே
ஆட்டிவைக்கும் ஐயமிது
கட்டிவைக்க பொக்கிஷத்தை
காட்டிவைக்கும் நேரமது
போதனை யார் செய்தார்
சோதனை ஏன் செய்தாய்
வேதனை தீர்வதற்கு
வேறொரு வழியுண்டோ