வாழ்வைச் சுமப்பவள்
![](https://eluthu.com/images/loading.gif)
உழுதவன் கணக்குப் பார்த்தால் ?
உழக்குக் கூட மிஞ்சாது !
உழைப்பவன் கணக்குப் பார்த்தால்?
உணவு கூட மிஞ்சாது !
பல பேருக்கு அன்னமிட்ட கைகள் ,
பசியில் உறங்குது இரவில்?
பார்த்துப் பார்த்துப் பதறிய நெஞ்சம்,
பாசம் இல்லாத இடத்தில் தஞ்சம்!
காசு செடியில் முளைக்கும் இலையா?
காய்ந்து விழும் சருகுகளும் பணமா?
காசுக்கு உழைக்குதுப் பிணமா !
கவலைப் பட இது தினமா ?
காய்ந்த வயிறுடன் உறக்கம் ,
காதலில் இல்லாத மயக்கம்.
காலை வரை எண்ணிப் பார்த்தும் ,
காயம் மட்டுமே தினமும் மிஞ்சும்.
வாரி வாரி இறைத்த கைகள்,
வாரிச் சென்றவர்கள் பொய்கள் .
வாழ்வைச் சுமப்பவள் தைய்யல்
வாழ்வில் துடிக்கிறாள் மெய்யில் .........?
..................................சஹானா தாஸ் !