கிறிஸ்துமஸ்

மார்கழி இராவினிலே
கன்னிமரி மடியினிலே
சின்னயேசு பாலகன்
பிறந்துவிட்டார் பாடுங்கள்

கந்தைதனை தொட்டிலாய்
புல்லணையே மெத்தையாய்
மாடடையும் குடிலினிலே
மாவேந்தனை பாடுங்கள்

வானவியல் ஞானிகளும்
வானவர் பிறப்பினை
நட்சத்திரம் கண்டதனால்
கிழக்கிலிருந்து தொடங்கினர்

மாளிகைதனை தேடித்தேடி
மயங்கியே திரிந்தனர்
விண்மீன் வழிகாட்டவே
விமலனைக் கண்டனர்

பொன்னும் வௌ;ளி தூபமும்
காணிக்கையாய் தந்துமே
கர்த்தன் பதம் தாழ்த்தியே
பணிந்துமே வணங்கினர்

மந்தைதனை மேய்க்கவே
தங்கிநின்ற மேய்பர்க்கு;
தேவதூதர் சொல்லிய
நல்ல செய்தி கிடைத்ததே

உன்னதத்தின் தேவனுக்கு
மாமகிமை கூறியே
பு+மிக்கு சமதானமும், மனுஷர்மேல் பிரியமென
தேவசேனை கூறிற்றே

அங்கிருந்து பாலனை
காணவேண்டி சென்றனர்
முன்னணையின் மீதிலே
மன்னவனைக் கண்டனர்

கந்தை போன்ற உள்ளமும்
மயங்கி நின்ற அறிவையும்
சுத்தனாம் உன்னிடம்
கொண்டு வந்து தருகிறோம்

மனுக்குலத்தின் பாவம்போக்க
பெத்லகேம் ஊரினிலே
அன்று பிறந்த தேவனே
பாவியான என்னுள்ளும் - நீ
இன்று பிறக்க மாட்டாயோ

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (22-Dec-13, 8:38 pm)
பார்வை : 2573

மேலே