என் அன்பான ராட்சஷி யே

நீ ஹாஸ்டல் சென்று படிக்கும் இந்த பிரிவை ஏற்க முடியாது யெனின், சில அறிவுரைகள். உன் குளியலறையில் கரப்பான்கள் தங்குவதாய் பயம் கொள்கிறாய். அடுத்த முறை வெளியே செல்லும் போது , கரப்பான் ஸ்கிட் வாங்கி உபயோகி. ஹாஸ்டல் சாப்பாடு உன் உடல் ஏற்றுக்கொள்வதில்லை என்கிறாய். அஜீரணத்தை ஏற்படுத்துகிறதாம். அதிகம் பிஸ்கட் , நொறுக்கு தீனிகளை மட்டும் எடுத்து கொள்கிறாயாம். உன் உடல் இளைக்கும். இந்த உன் சிரத்தை கவலை கொள்கிறேன் நான். இந்த பிரச்சினைக்கு நிறைய யோசித்துவிட்டேன். நல்ல வழி தெரியவில்லை. நீர் அருந்துவதிலும் கவனம் செலுத்து. அவசரமாக வகுப்பறைக்கு கிளம்பும் நீ உன் ஸ்கர்ட்டின் கச்சை தெரியுமாறு சுடிதார் அணியாதே . ப்ளீஸ் தாங்க மாட்டேன். ஹில்ஸ் செறுப்பை தவிர்க்கவும் , படிகளில் இறங்கையில் கவனம். மற்றபடி , இந்த இரவில் உன் வேலைகள் முடிந்தது யெனினும் , உன் போன் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் , உன் முத்தங்களுக்காகவும் . . .