பெற்றோர்-நண்பன்-காதல்
கண்ணீருடன் காத்திருந்தேன் காதலிக்காக
கண்ணெதிரே நின்றதோ கடந்த கால நண்பன்
கவலையோடு சொன்னேன் நண்பனிடம்
கனவாய் போன என் காதல் கதையை,,,
கடுகளவு சிரிப்பிற்கு காரணம் கூறாமல்
கன நேரத்தில் கேட்க்கப்பட்ட நண்பனின் கேள்வி
காத்திருக்கிறாய் நண்பனே காதலிக்காக
காலங்கள் உன்னை ஏமாற்றியதா?
இல்லை கடவுள்தான் உன்னை ஏமாற்றியதா?
இதற்கெல்லாம் காரணம் உன் பெற்றோரா?
இல்லை உன்னால் மறக்கப்பட்ட நண்பனா?
இல்லை நண்பா, நீ மட்டுமே காரணம்...
வேண்டாம் என்று சொல்லவில்லை காதலை, உனக்கு
வேண்டியதை செய்ய உன் பெற்றோரும் தவறவில்லை
வேதனை பலவற்றை தன்னுள்ளே தாங்கி உன்னை
வெற்றிபெறச் செய்தவரை வேண்டுமென்றே மறக்கலாமா?
சோதனைகள் பல வந்தும் அதை
சாதனைகளாய் மாற்றித்தந்த உன் நண்பனை
பாதியில் வந்த பெண்ணுக்காக உன்
பாதையில் இருந்து விலக்கலாமா?
உனக்காக மட்டும் வாழ்பவர்கள் பெற்றோர்கள்
உன்னுடன் சேர்ந்து வாழ்பவர்கள் நண்பர்கள்
இவர்களை மறுக்க வேண்டாம்
இவர்களிடம் மறைக்க வேண்டாம், உன் காதலை...