ஆறறிவு இல்லையே

ஆறறிவு இல்லையே
எமக்கு
சண்டைப்பிடித்தாலும்
சமாதானத்தை பிடிக்கிறது
எமக்கு..

ஆறறிவு இல்லையே
எமக்கு
புற்கள் கொஞ்சமென்றாலும்
பகிர்ந்துன்னுவதில்
நெஞ்சம் நிரம்புகிறது
எமக்கு..

ஆறறிவு இல்லையே
எமக்கு
உழைக்க நடக்கிறோம்
உயர்வு கிடைக்கிறது
எமக்கு..

ஆறறிவு இல்லையே
எமக்கு
அடிவிழுந்தாலும்
அழகிய
பக்குவம் கிடைக்கிறது
எமக்கு..

ஆறறிவு இல்லையே
எமக்கு
பசியென்றால்
பால் தரும்
பண்பாடு இருக்கிறது
எமக்கு..

ஆறறிவு இல்லையே
எமக்கு..

எழுதியவர் : வசீம் அக்ரம் (23-Dec-13, 11:31 am)
Tanglish : aararivu illaiye
பார்வை : 255

மேலே