காதலென்னும் சோலையினில்28

ராஜலெக்ஷ்மியின் வற்புறுத்தலின் காரணமாக கவிதா நடந்ததை சொன்னாள் எல்லாம் சொல்லாமல் கொஞ்சம் மறைத்து பேசினாள்.

இவள் பேசியது அத்தனையும் கண்கூட தட்டி முழிக்காமல் பார்த்துக் கேட்டு கொண்டிருந்தாள் கவிதா............


இதெல்லாம் உண்மையா! பொய்யா! என்றே தெரியாத அளவுக்கு கதை சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று கண்களை அகல விரித்துக்கேட்டாள்.


கவிதாவோ உனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது எனக்கோ நரக வேதனையாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள்...........


இருவரும் பேசிகொண்டிருக்கும் போதே டிரைவர் வரவே பேச்சை நிறுத்தி விட்டு அண்ணா வண்டியை நம்ம பேக்டரிக்கு கொண்டு போங்க என்று ராஜலெக்ஷ்மி கூறினாள்.


உடனே கவிதா இடைமறித்து இப்போது போகவேண்டாம் என்று சொல்லவே இல்லை அண்ணி பக்கத்துல தான் இருக்குது போயிட்டு போகலாம் என்று சொன்னாள்.



முதன் முறையாக அண்ணி என்று பாசமாக சொன்னது கவிதாவுக்குள் பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியது மறு பேச்சு பேசாமல் சரி என்பது போல் மௌனமானாள்.


வண்டி கிளம்பி சிறிது நேரத்தில் பேக்டரி பக்கம் போய் நின்றது.....


இருவரும் இறங்கி உள்ளே நடந்தார்கள் கவிதாவுக்கு மனதிற்குள் வருத்தமாக இருந்தது யாராவது தாரா குடும்பம் மாதிரி நம்மளை அவதூறாக பேசினால் இனியும் என்னால் தாங்க முடியாது, ராஜலெக்ஷ்மிக்கு என் நம் நிலைமை புரியவில்லை என்று வருத்தத்தோடு சென்றாள்.



கவிதாவை பார்த்து ராஜலெக்ஷ்மி ஏன் அண்ணி ஒருமாதிரி இருக்கீங்க? இங்கு யாரும் உங்களை எதுவும் சொல்லமுடியாது ஏன் என்றால் இது உங்களுக்கு சொந்தமான இடம் நீங்கள் தான் முதலாளி என்றாள் சந்தோஷமாக................


முதலாளியை தவறுதலாக பேசும் தொழிலாளிகள் இங்கு அப்புறம் வேலை செய்ய வேண்டாமா என்ன என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.



இது என்ன பேக்டரி என்று கவிதா கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது ராஜலெக்ஷ்மிக்கு என்ன அண்ணி அண்ணன் உங்க கிட்ட இது பற்றி எதுவும் சொல்லலியா?



இல்லை நான் இதபற்றி கேட்கல என்று சமாளித்தாள்........


ராஜலெக்ஷ்மிக்கு ஒன்றும் புரியவில்லை. இது பருப்பு பேக்டரி நம்பர்1 தரம் உள்ள அன்னை பருப்பு கேள்வி பட்டிருக்கீங்களா அண்ணி?



ஆமா! எங்க ஊரிலெல்லாம் அதான் ரொம்ப பேமஸ்...., அதான் உங்க பேக்டரியா என்று ஆச்சர்யமாக கேட்டாள் கவிதா!!!!!!!!!!!


எங்க பேக்டரி இல்ல உங்க பேக்டரி என்றாள் கிண்டலாக.....................


இருவரும் வெளியே சுற்றி பார்த்துவிட்டு உள்ளே ராஜசேகரனின் அறைக்கு சென்றனர் இவர்கள் உள்ளே போகும் நேரம் தாரா அங்கிருந்து வெளியே வந்தாள்..............................

எழுதியவர் : (23-Dec-13, 12:00 pm)
பார்வை : 278

மேலே