மாலை நேரத்து மயக்கம்1

அந்த மாலைகளில் விமலாவை பற்றிய நினைப்பு என்னை என்னவோ செய்துக்கொண்டிருந்தது. தினமும் வேலை , வீடு யென்று இருந்தேன். அதிலும் சில நாட்கள் வேலையற்று வீட்டில் சோர்ந்து கிடந்த அந்த நாட்களை விழாக்களை போல உற்சாகமாகியது அவள் வரவு. அவள் ஆசிரியை பயிற்சி படிப்பை முடிக்கும் நேரத்தில் இருந்தாள். பார்த்த இரண்டு வாரங்களிலே நட்பாகி , பின் இரண்டு மாதங்களிலே பரஸ்பரம் காதல் மொழிந்து கொண்டோம். தினமும் பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசிக்கொண்டோம். பேசும் போது கூட , அவள் தோழி சந்தியாவும் இருக்க வேண்டும் யென்று அடம் பிடித்து கேட்டுக்கொண்டாள். ஞாயிற்றுக்கிழமைகளில் , நண்பன் ஊர் போகும் அன்று, அவன் அறையில் சந்தித்து பேசிக்கொண்டோம். கூடவே சந்தியா இருப்பதால் முத்தங்கள் மட்டும் முடியும். அது மட்டுமில்லமால் , வேளைகள் தவறமால் தொலைப்பேசியில் காதல் பேசிக்கொண்டோம்.
.
அந்த நாள்களில் பெண்களிடம் அதீத நெருக்கம் ஏற்பட்டிருந்தது. விமலாவை தவிர , எங்கள் காதல் விஷயம் அவள் அக்கா அமுதாவிற்கு தெரிந்தாததிலிருந்து , அவளும் , சந்தியாவும் என் மேல் மரியாதையாகவும் , அக்கறையாகவும் பழகினார்கள். எதிர் பாலினத்திடம் இருந்து கிடைக்கும் இப்படி யொரு அன்பு , அழகான வேறோரு உலகமாக பட்டது. அதே நேரத்தில் , ஆண் நண்பர்கள் அன்பு கொள்ளவும் , சிறிதான பொறாமை கொள்ளவும் செய்தார்கள். தினமும் டீரிட் கேட்டார்கள் , செலவு செய்தேன். குடிப்பதை விட்டேன். அவர்களுக்காக வாங்கி தந்தேன். அப்படி போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் . . .
.
அவள் உடன் படிக்கும் தோழியின் திருமணத்திற்கு மூவரும் சேர்ந்து போவதாக முடிவு செய்திருந்தோம். திருமணத்திற்கு முந்தைய இரண்டு நாள்கள் விமலா வளையல் , கவரிங் நகைகள் வாங்குவதாகவும் , புது ஜாக்கெட் தைக்கனும் சொல்லி என்னை பார்க்க வரவில்லை. திருமணத்திற்கு முந்தைய இரவு ,வரவேற்பறைக்கு மட்டும் அவளோடு போவதாக முடிவு செய்திருந்தேன் . வண்டியில் போக வேண்டாம் யென்று சொல்லி விட்டாள். அடுந்த நாள் மாலை பேருந்து நிலையத்தில் அவர்களுக்காக காத்திருந்தேன். எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே வந்தார்கள்.
.
அவள் எளிமையான சித்திர வேலைப்பாடு செய்த ஆரஞ்சு நிற சேலையில் வந்திருந்தாள். அவளை சேலையில் பார்த்து ஆசைப்பட்டு தான் காதலித்தேன் . இப்பொழுது கூட , அவள் உடல் சேலைக்கு பழகிக்கொண்டிருக்கிறது. கண்ணுக்கு கொஞ்சம் மையும் , இலை வேலைப்பாடுகள் உடைய வளையல்கள் கைக்கு இரண்டு போட்டிருந்தாள். நீண்ட மல்லிகைப்பூ சரத்தை ஒரு கொத்து முடி கிடையில் சொருகியிருந்தாள். அதுவே போதும் , நான் ஏகத்திற்கு கண் வைத்தேன். தேவதை காதலிப்பதில்லை. காதலிக்கப்படுகிறாள் என்பதை உண்மையாக உணர்ந்த நேரங்கள் அது.
.
"ரொம்ப நேரம் ஆயிருச்சா " சந்தியா தொடர்ந்தாள்.
" இல்லை இப்பதா " என்றேன்.
விமலா தன்னை கொஞ்சம் பார்க்க சொல்லி கண்களால் சமிக்ஞை செய்தாள்.
"மை கொஞ்சம் ஜாஸ்தி போல"
"டேய் இல்லைடா கம்மிதான். நல்லாயில்லையா ?"
"நல்லாயில்லை னு சொன்னா அடிப்பேயே" என்றேன்.
மெதுவாக நெருங்கி வந்து என் கையை கிள்ளினாள்.
" ஆஆஆஆ " வென்றே
கையை விடுவித்து திரும்ப வம்பு செய்தேன்.
" இன்னிக்கு எல்லா செலவும் டீச்சர் து" என்றேன்.
" ஆமாண்டா. எப்ப பார்த்தாலும் செலவுக்கு டீச்சர் கிட்டயே கேளு " என்றாள்.
" எங்க. போன தடவை பீர் வாங்க பணம் பத்தலை, எவ்வளவு கெஞ்சுனேன் தரலையே"
"என்னது" கண்களை பெரிதாக காட்டி முறைத்தாள்.
"அய்யோ ஒன்னும் இல்லை "
" அது . . ." என்றாள்.
சில நேரங்களிலே பேருந்து வந்தது. விரைவாக ஏறி போனேன். ஒரு ஜோடி சீட்டு கிடைத்தது. அவளையும் , சந்தியாவையும் உட்கார விட்டேன் .
" சரி சரி தள்ளி நில்லு " என்றாள்.
" சொல்லுவா டி கஷ்டப்பட்டு ஏறி சீட்டு போட்ட , ராணி மாதிரி உட்கார்த்துட்டு எல்லாம் சொல்லுவா " என்றேன்.
" அச்சோ . . அப்புறம் டா"
"சந்தியாவுக்காக விடறேன் "
"இல்லைனா . . என்ன பண்ணுவ "
" எதுவும் பண்ண மாட்டேன் " அமைதியானேன் .
வெறுமனே சிரித்தாள்.
ஒவ்வொரு நிறுத்தங்களில் வம்பு செய்து சிரித்தாள். சந்தியா அமைதியாக இருக்க சொன்னாள். நிறுத்தம் வந்ததும் , இறங்கி நடந்தோம்.
மண்டபம் நேர் சாலையில் இருந்தது. விமலா , தன் தோழிகளுக்கு போன் செய்து வந்து விட்டதாக சொன்னாள்.
.
" ரிசப்ஷனுக்கு போன பிறகு என்ன பண்ணுவ " அவளிடம் கேட்டேன்.
" ப்ரண்ட்ஸோட தா. நீ மட்டும் தனியாதா இருக்கனும் " என்றாள்.
.
அவள் தோழி எதிரே கூட்டிபோக நடந்து வந்தாள். சந்தியாவை மட்டும் போக சொன்னேன்.
"2 மினிட்ஸ் . வந்துறுவோம் " என்றேன்.
அவள் சிரித்தபடி போனாள்.
.
" உனக்காக தானே வந்தேன். நீ என்னனா , சரி விடு ஒரு கிஸ் கொடுத்துட்டு போ. " என்றேன்.
.
" டேய் லூஸா டா நீ. நடு ரோட்ல எப்படி " என்றாள்.
.
மணி ஏழு இருக்கும். குளிர் நாட்கள் நல்ல இருட்டு. எதிர்ப்படும் வாகனங்களின் வெளிச்சம் எங்கள் மேல் விழுந்தது. பொன்னிறமான அவள் மேலும் ஜோலித்தாள். அழகாகவும் ஒரு உணர்வாகவும் இருந்தது.
தொடரும் . . .part 2