+சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே+

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி!
சீறிப்பாயும் சீறிப்பாயும் மெயில் வண்டி!
ஆடிஆடி செல்லும்அது மயில் வண்டி!
கூவிகூவி செல்லும்போது குயில் வண்டி!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி செல்லும்வண்டி!
பட்டிதொட்டி எல்லாம் செல்லும் பாசவண்டி!
காந்திமுதல் கலாம்வரை சென்ற வண்டி!
ஜாதிமத பேதமில்லா நல்ல வண்டி!

இணைந்துஇணைந்து செல்லும்இது பாசம் சொல்லும்!
தடம்மாறாமல் செல்லும்இது நேர்மை சொல்லும்!
சிக்னலுக்கு கட்டுப்பட்டு கீழ்படிதல் சொல்லும்!
எதையும்தாங்கும் இதுநமக்கு மனஉறுதி சொல்லும்!

நாம் செல்லுமிடம் கச்சிதமாய் அழைத்துச்செல்லும்!
இரவில் தூங்கும்போது "தடக் தடக்" தாலாட்டுசொல்லும்!
பயணத்தின்போது நட்பு பூவை மலரச்செய்யும்!
பயணம் முடியும்போது கண்ணீர்துளியை உதிரச்செய்யும்!

நம் பாரதத்தை இணைக்கும்இந்த ரயில்வண்டி!
இரவும் பகலும் செல்லும்என்றும் தூங்காவண்டி!
நாடு விட்டு நாடுசெல்லும் நட்புவண்டி!
பலபாட்டுக்கு மெட்டுதந்த இது அற்புதவண்டி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Dec-13, 1:01 pm)
பார்வை : 132

மேலே