+மனதுள் மழையும் பொழிகிறதே+
மழை வரும்போது மழை வரும்போது
மனதும் மழையில் நனைகிறதே!
நீ வரும்போது நீ வரும்போது
மனதுள் மழையும் பொழிகிறதே!
மழையும் வெய்யிலும் சேரும் வேளை
வானில் வானவில் தோன்றியதே!
நீயும் என்னை நினைக்கும் வேளை
ஜகமே வானவில் ஆகிறதே!
மழையே மழையே பாடியதாய்
மனதில் ஏதோ தோன்றியதே!
வெயிலும் சேர்ந்து ஆடியதாய்
மனதில் படமும் ஓடியதே!
சிலுசிலு காற்றும் சிலுசிலு காற்றும்
சுகமாய் சுகமாய் வீசியதே!
பனித்துளி போல பனித்துளி போல
சூரிய வெப்பம் மாறியதே!
இந்தக் கணமே இந்தக் கணமே
என்றும் வேண்டும் கிடைத்திடுமா!
எந்தக் கணமும் எந்தக் கணமும்
இந்தக்கணம் போல் மாறிடுமா!