வாட்டம்

சொல்லெனா உணர்வுகள்
விழிகளும் போடும் நீர் பாதை

வெளிவரா வலிகள்
உணர்கிறேன் வெகுவாகவே

குழந்தையின் வாட்டம்
கண்டதும் உணர்வாள் அன்னை

நட்பெனும் உறவின் வாட்டம்
காணாமலே உணர்கிறேன் நானும்

இனி ஒரு பிறப்பும் இருந்தால்
எமக்கு மகனாக அன்றி மகளாக
பிறந்து விடு
அன்பிலே நிறைக்கிறேன்
உயிரையும் கொடுக்கிறேன்

நேசமுடன் நட்புடன்
Rs Av

எழுதியவர் : R . S . Arvind Viknesh (23-Dec-13, 2:25 pm)
பார்வை : 86

மேலே