நல்லதோர் வீணை செய்து

காலையில் கல்லூரி வாசலில் பரிதவிப்போடு காத்திருந்தாள் விமலா,,, அடிக்கடி தன் மணிக்கட்டில் கட்டி இருத்த கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள்,,,

"இன்றைக்குத்தான் கடைசி நாள் எப்படியாவது சொல்லி விட வேண்டும்"- மனதிற்குள் முனுமுனுத்தாள்

கண்களில் ஏக்கம்,,,, அதோ அவளின் எதிர்ப்பார்ப்பு வந்து கொண்டிருக்கிறது,,,,,,, பிரதாப்

நல்ல அழகான இளைஞன்,,, நல்ல விளையாட்டு வீரனும் கூட,,, அவன் அழகில் பல பெண்களுக்கு மயக்கம் உண்டு,,, விமலாவிற்கும் தான்


தன் காதலை பல முறை அவனிடம் சொல்ல நினைத்தாள்,,,,, என்ன செய்ய "அச்சம். மடம், நாணம்"- இதில் எதோ ஒன்று தடுத்து கொண்டே வந்தது,,,, இதோ கல்லூரியும் முடியப்போகிறது


இனி தயங்கி பயனில்லை எனவே எல்லா தடைகளையும் தாண்ட துணிந்து விட்டாள்,,

பிரதாப் விமலாவை நெருங்கி விட்டான்,,,

"ஹாய் விமலா "

"ஹாய்"- சத்தம் அவளுக்கே கேட்டிருக்காது போல அவள் கை கால்களில் நடுக்கம்,,,, எங்கே போனதோ அத்தனை துணிவும்,,,,,, அவன் கண்களை பார்க்க கூட முடியவில்லை,,,, கஷ்ட்டப்பட்டு வார்த்தைகளை இழுத்தாள்

"பிரதாப் நான் உன்ன ,,,,,, நான் உன்ன,,,"-ஏனோ வார்த்தைகள் உதவிக்கு வரவில்லை,,, ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் காதலை சொல்வதே கடினம் இதில் ஒரு பெண் ஒரு ஆணிடம் எப்படி சொல்ல முடியும்,,, தயங்கி தவித்தாள்

"என்ன விமலா,,,,, என்ன லவ் பண்றியா??" - சர்வ சாதாரணமாக எப்படி இவனால் கேட்க முடிந்தது,,, அவன் எத்தனையோ பெண்களிடம் இந்த வார்த்தையை கேட்டிருக்க வேண்டும் போல அதன் இவளின் காதலையும் மிக சாதாரணமாக எடுத்து கொண்டான்,,,,,,,, பொதுவாக பெண்கள் ஆண்களை தேடி வந்தால் அவளை அந்த ஆண் மதிப்பதில்லையே அதே தான் அங்கும் நடந்தது,,,

அவன் ஏளன பார்வையில் கூனி குறுகி நின்றாள் விமலா,,,

"சாரி விமலா நான் உன்ன லவ் பண்ணல"- சொல்லிவிட்டு போய் விட்டான்

அவளுக்கு உலகமே சரிந்தது போன்ற உணர்வு என்ன செய்ய எப்படி இந்த துயரிலிருந்து மீள,,,,,,, கலங்கி தவித்தாள்

மனம் அவனை மறக்க மறுத்தாலும் விதி விடுவதாய் இல்லை கல்லூரி முடிந்த மறு வருடமே மங்கள நாதம் ஊதப்பட்டது அவள் வாழ்வில்,,,,,,,,,,,,,,

சிவகுமாரன் நண்பர்கள் வட்டத்தில் சிவா,,,,,, அசிஸ்டென்ட் மெக்கானிக்கல் இஞ்சினியர்,,,,,,, நல்ல உயரம்,,,,,, நல்ல குணம்

விமலாவின் மன வாழ்வு ஒரு சொர்கமாகவே அமைந்தது,,,, சிவாவிற்கு விமலா என்றால் உயிர் அவளை "குட்டிமா" என்றே அழைத்தான்

மாமியார் வீட்டில் ஒரு இளவரசியாகவே வாழ்ந்தால் விமலா,,,,,,

"இப்படி ஒரு வாழ்க்கைகாகத்தான் பிரதாப் என்னை விலகி சென்றானா??"- விதியின் சூட்சமம் புரிந்தது அவளுக்கு

பிரதாப்பை மறந்தாள்,,, சிவாவை உயிரை விட அதிகமாய் நேசித்தாள்,,,,


நாட்கள் உருண்டோடினர் இரண்டு அழகான ஆண்டுகள்

தன் திருமண வாழ்வில் முதல் முறையாக கண்ணீரை சிந்தினாள்,,,,,, சிவா அலுவலகம் முடித்து வீட்டினுள் நுழைந்தான்

அவளின் அழுகை சிவாவை கலக்க முறை செய்தது ,,,,

"குட்டிமா என்னடா ஏன் டா அழற??"

",,,,,,,,,,"- அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள்
கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை

"என்னடா ஆச்சு சொல்லு டா,,,,,,, அம்மா ஏதும் சொன்னாங்களா,,,,,?? உடம்புக்கு ஏதும் பண்ணுதா??சொல்லு டா ப்ளீஸ் டா "- கேள்விகளை தொடுத்தவண்ணம் கெஞ்சினான்

"இல்லைங்க"- வேகமாக சொன்னாள்,,,, பின் அவன் முகத்தையே பார்த்தாள்,

"என்ன தாண்டா செய்யுது நீ அழறது எனக்கு கஷ்டமா இருக்கு டா ப்ளீஸ் சொல்லு டா"- மீண்டும் கெஞ்சினான்

"என் மேல நீங்க இவ்ளோ பாசம் வச்சிருகீங்க ஆனா என்னால இது வரைக்கும் உங்களுக்கு ஒரு குழந்தை பெத்து குடுக்க முடில,,,,,, எனக்கு அத நெனச்சா கஷ்டமா இருக்குங்க"- சொல்லிவிடு அழுதாள்

"அட இவ்ளோ தான என்ன என்னவோ ஏதோனு பயந்துட்டேன்,,,,,, இப்போ என்னமா ஆச்சு நமக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் தானே ஆகுது,,, எத்தனையோ பேருக்கு ஆறேழு வருஷம் கழிச்சி கூட குழந்தை பொறந்துருக்கு வருத்தபடாதமா"- அன்பு மனைவிக்கு ஆறுதல் சொன்னான் சிவா

நாட்கள் உருண்டன,,, விமலா குழந்தையின் எண்ணத்தையே மறந்தாள்,,, கணவனின் அன்பில் ஒரு குழந்தையாகவே வாழ்ந்தாள்

ஒரு நாள் மதிய வேலை விமலா ஒரு ஸ்வெட்டர் பின்னி கொடிருந்தாள்,,, திடீரென ஒரு எண்ணம் மனதில் தோன்ற நேரே எழுந்து சென்று
காலண்டரை பார்த்தாள்,,,,,,,, 60 நாட்கள்

மனதிற்குள் மகிழ்ச்சி படை எடுக்க தன் அத்தையுடன் ஒரு மருத்துவரை அணுகினாள்,,,, அதிலும் பச்சை கொடி தான்

அளவில்லா மகிழ்ச்சியில் இருந்தாள் விமலா,,, இனிப்புடன் மாலையில் வீட்டிற்கு வந்த சிவா இன்னோர் இனிப்பான செய்தி சொன்னான்,,,,

"குட்டிமா எனக்கு சீப் இஞ்சினியரா பிரமோசன் கெடச்சிருக்கு,,, நாளைக்கே நாம குன்னூர் போகணும்"

இரட்டிப்பு மகிழ்ச்சியில் அந்த ட்ரெயினில் இருவரும்,,,,,,,,,,,

குன்னூரில் ஒரு வீடு அவர்களுக்காக கொடுக்கப்பட்டது,,,,,,,

வாழ்க்கை மிக அருமையாக சென்று கொண்டிருந்தது விமலாவிற்கு அவளின் அழகும் மெருகேறி இருந்தது

ஆனால் முன்னர் போல சிவாவால் விமலாவுடன் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை,,,, அது ஒரு தனிமையான உணர்வாக நினைத்தாள் விமலா,,,

விதி அவள் வாழ்வில் மீண்டும் விளையாட ஆரம்பித்தது,,,, விமலாவின் வாழ்வில் மீண்டும் வந்தான் பிரதாப்,

ஒரு நாள் எதேர்ச்சையாக சிவாவும், விமலாவும் பிரதாப்பை சந்திக்க நேர்ந்தது,,,,

அவனை தன் கல்லூரி நண்பனென அறிமுகம் செய்து வைத்தாள் விமலா,,, அவனிடம் தன் விசிட்டிங் கார்டு கொடுத்து வந்தான் சிவா

அதிலுள்ள முகவரி தேடி விமலாவின் வீட்டிற்கே வந்தான் பிரதாப்,,,,

பழசை எல்லாம் மறந்து ஒரு நண்பனை போல அவனை வரவேற்று உபசரித்தாள்,,, ஆனால் அவனின் எண்ணம் வேறாக இருந்தது

"விமலா நான் ஒன்னு கேட்கலாமா?"
"கேளு பிரதாப்"
"நீ என்னை விரும்புறியா?"
"என்ன கேக்குற பிரதாப்"
"நான் உன்ன விரும்புறேன் விமலா "
"பிரதாப் இத நீ அன்னைக்கே சொல்லிருந்தா நான் சந்தோசப்பட்டுருபேன், இப்ப நான் இன்னொர்த்தரோட மனைவி,,, என்கிட்டே இப்படி பேசாத பிரதாப்"

"உனக்கு வேற வழி இல்ல விமலா நீ நான் சொல்றத செஞ்சி தான் ஆகணும்"

"என்ன சொல்ற பிரதாப்"

"ஆமா, நீ நான் சொல்றத கேட்கலானா நீ என்ன விரும்புன விஷயத்த உன் புருஷன்ட்ட சொல்லிடுவேன்"

"அத அவர் நம்ப மட்டாரு"

"சும்மா சொன்ன நம்ப மட்டாரு இந்த போட்டோ காட்டி சொன்னா"

ஒரு சில புகைப்படங்களை காட்டினான்,,, அதில் விமலாவின் கல்லூரி நாட்கள் எதார்த்தமாக, பிரதாப் மேலிருந்த காதலில் அவனோடு எடுத்து கொண்ட புகை படங்கள்


"இத வச்சி உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குனே என்னால சொல்ல முடியும்"

இடிந்து போனாள் விமலா,"கடவுளே என்ன இது சோதனை"

"நான் சொல்றத கேட்டா ஒரே நாள் தான் உன்ன விட்டுடுறேன் இல்லான இந்த போட்டாலாம் உன் புருஷன் கைக்கு போய்டும் நீயே முடிவு பண்ணிக்கோ"

"பிரதாப் வேண்டாம் பிரதாப் இப்போ நான் கர்பமா இருக்கேன் என் குழந்தையையும் என்னையும் கலங்க படுத்த நினைக்காத,,,,,,, ப்ளீஸ் பிரதாப் அந்த போட்டோ எல்லாம் குடுத்துடு,,,, ப்ளீஸ் என்ன விட்டுட்டு" - அழுது கதறினாள் விமலா

"நோ வே....,,,,, உனக்கு ஒரு நாள் டைம் தரேன்,,, அதுக்குள்ளே நீயே எனக்கு போன் பண்ணனும் இல்லன மறுநாளே இந்த போட்டோலாம் உன் புருஷன் கைல இருக்கும் அது மட்டும் இல்ல இண்டர்நெட்லயும் போட்டுடுவேன்"- மிரட்டி விட்டு போனான் பிரதாப்

"கடவுளே என் வாழ்வில் ஏன் இப்படி ஒரு சோதனை,,,, என்ன செய்வேன் நான்"- கதறி அழுதாள்,,,

சிவா வீட்டிற்கு வந்து விட்டான்,,, சிவாவிடம் சொல்லலாமா,,, வேண்டாமா தவித்தாள்

சிவா என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருந்தான்,,,,,

விமலாவின் முகத்தை பார்த்தான்,,,,,, அவனுக்கு எதோ புரிந்து விட்டது,,,, அந்த இரவு விட்டு விட்டான்,, மறுநாள் காலை

"குட்டிமா "

"ம்ம்ம் "

"ஏன் ஒரு மாதிரி இருக்க,,,,,,"
"அப்படிலாம் இல்லையே,,,, நீங்க என்ன நல்லா பாத்துகுரீங்க அப்பறம் நான்,,,, நல்லா தாங்க இருக்கேன் "- படபடத்தாள்

"இல்ல நீ எதோ பிரச்சனைல இருக்க சொல்லு குட்டிமா"- சிவா விடுவதாக இல்லை

இப்போது விமலா அமைதி காத்தாள்,,,,

"என் மேல சத்தியம் சொல்லு குட்டிமா"

அவன் மீது அவன் செய்து கொண்ட சத்தியம் இவளை வாயத்திறக்க வைத்தது,,,,,,,, தன் கல்லூரி காதல் முதல் இப்போதைய பிரச்சனை வரை எல்லாவற்றையும் சொல்லி அழுதாள்,,,, அவன் மடியில் முகம் புதைத்திருந்தாள்,

"நீ போயிட்டு வா குட்டிமா"

அழுது கொண்டிருந்தவளின் அழுகை மட்டுமல்ல அவளின் இதயமே ஒரு நொடி நின்று விட்டது,,,

"என்னங்க சொல்றீங்க,,,,,, என்ன வெறுத்துட்டீங்களா?" கேட்டு விட்டு அழுதாள் விமலா

"இல்ல டா குட்டிமா நான் உன்ன எப்போதுமே வெறுக்க மாட்டேன்,,,,,, நீ இல்லாம எனக்கு லைப் இல்ல டா,,,,, நீ அழகூடாது,,,,,, உன் மனசு வருத்தப்படக் கூடாது,,,,,,, நான் சொல்றத செய் டா நீ போ,,,, போயிட்டு வா டா,,,,,, "- சிவா அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தான்

அன்று மாலை.

மனம் நிறைய வேதனையும், கண் நிறைய கண்ணீருமாய் பிரதாப்பின் வீட்டு கதவை தட்டினாள் விமலா,,,, அது தானாகவே திறந்து கொண்டது

உள்ளே சென்றாள்,,,, படுக்கை அறையில் விழி மூடி படுத்திருந்தான் பிரதாப்

"பிரதாப்"- அழைத்தாள் விமலா

விழித்திறந்தான்,,,,,,,,, அவன் கண்கள் குளமாக இருந்தது,,,


"என்ன மன்னிச்சிடு விமலா,,,,,,"- அவள் காலில் விழுந்தான் பிரதாப்

விமலாவிற்கு எதுமே புரிய வில்லை,,,,,, எழுந்தான்,,,, மேஜை மீதிருந்த புகை படங்களை எடுத்தான்

"இதோ விமலா நீயும் நானும் எடுத்துகிட்ட போடோஸ் அண்ட் நெகடிவ்ஸ்,,,,, இத உன் கண்ணு முன்னாலையே,,,,"- நெருப்பில் வீசி எறிந்தான்

"என்ன பிரதாப் இதெல்லாம்"- அவள் மனம் நிம்மதியானாலும் ஏன் இந்த திடீர் மாற்றம் என்ற குழப்பத்தில் கேட்டாள்


"இன்னைக்கு காலைல நான் உன் வீட்டிற்கு வந்திருந்தேன் அங்கே நீயும் உன் புருஷனும் பேசிட்டு இருந்தத நான் கேட்டேன்,,, எந்த ஆம்பிளையும் செய்ய துணியாத காரியத்த உன் புருஷன் செய்ய தயாரா இருந்தாரே,,,,,, எது தெரிமா நீ கலங்க பட்டு வந்தா கூட உன்ன காதலிக்க தயார இருந்தாரே அவர் முன்னால நான் எல்லாம் புழுவுக்கு சமான மாயிட்டேன்,,,,,, பிறன் மனை நோக்குதல் பாவம்னு புரிஞ்சிகிட்டேன்,,,,,, போ விமலா கலங்கம் இல்லாதவளா உன் புருஷன் கிட்டயே போ என்னால இனி உனக்கு எந்த தொல்லையும் இருக்காது,,,,,,"- சொல்லிவிட்டு அழுதான் பிரதாப்

மகிழ்ச்சியில் அவனை கும்பிட்டு வீடுவந்தாள்,,,, சிவா விடம் நடந்ததை கூறினாள்,,, அவனும் மன கலக்கம் நீங்கினான்


மறுநாள் அலுவலகத்தில்,

சிவா தன் தோழன் மகேஷிடம் பேசிக் கொண்டிருந்தான்,,,

"நீ இப்படி ஒரு காரியம் செய்வேன்னு நான் நெனைக்கவே இல்ல டா,,,,,,, சப்போஸ் எதாவது தப்பு நடந்திருந்தா என்ன டா பண்ணிருப்ப"- என்றான் மகேஷ்

"அப்பவும் என் மனைவிய நேசிச்சிருப்பேன்,,,, என்ன டா பாக்குற,,,,, நம்ம திருமண வாழ்க்கைங்குறது ஒரு அழகான வீணை மாதிரி அத "துரோகம், சந்தேகம்"- என்ற புழுதில நாமலே எரிஞ்சிடுறோம்,,,,,,,

என்ன பொறுத்த வரைக்கும் கணவன் மனைவிக்கிடையில் ஒரு பைத்திய காரத்தனமான அன்பு , காதல் இருக்கணும் டா,,, அது மட்டும் தான் நம்ம வாழ்க்கைய எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமா வச்சிருக்கும்"- என்றான் சிவா

அப்போது அந்த அலுவலக ஊழியரில் ஒருவர் வந்தார்

"என்ன சார் இன்னும் கிளம்பலையா நம்ம 'பாரதியார் தாசன்' வர நேரம் ஆச்சு சீக்கிரம் கிளம்புங்க"- என்று எச்சரித்து விட்டு சென்றார்

பாரதியார் பாடல் மேல் வந்த ஈர்ப்பால் தினமும் உணவு இடைவேளையில் பாரதியின் பாடல்களை அவர் படுவார் அதனால் வந்த காரண பெயர் தான் 'பாரதியார் தாசன்'

அன்று அவர் பாடிய பாடல்,


"நல்லதோர் வீணை செய்து - அதை
நலம்கெட புழுதியில் எறிவாருண்டோ
சொல்லடி சிவ சக்தி -என்னை
சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்"


இந்த பாடலை கேட்டபடி அங்கிருந்து சென்றனர் சிவாவும் மகேஷும்,,,,,,,,,,,,,,,


(முற்றும் )

எழுதியவர் : நிலா மகள் (23-Dec-13, 3:55 pm)
பார்வை : 212

மேலே