காரணம் – ஒரு பக்க கதை

காரணம் – ஒரு பக்க கதை
******************************************
‘’பக்கத்து வீட்டு சுதா டீச்சர்கிட்டே நீ அதிகம் வச்சுக்கிறதில்லை
மாதிரி இருக்கே… ஏன்?’’ ரம்யா கேட்க…
-
‘’அவ சாதாரண எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர், நான் ஹையர்
செகண்டரி ஸ்கூல்ல பி.ஜி.அஸிஸ்டென்ட். அப்படியிருகிறப்ப
அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்’’ என்றாள் ஆர்த்தி
கர்வத்துடன்.
-
ஒரு மாதம் ஓடி விட்டது.
-
துவைத்த துணிகளை எடுத்து வர வீட்டின் பின்பக்கம் சென்றாள்
ஆர்த்தி.
-
சுவருக்கு அந்தப்புறம் சுதா யாருடனோ பேசிக்கொண்டிருப்பது
மெதுவாக கேட்டது.
-

என்ன பேசுகிறார்கள்? யாதார்த்தமாக கவனித்தாள்.
-
பக்கத்து வீட்டு ஆர்த்தி டீச்சர்கிட்ட, நீ அதிகம் வச்சுக்கிறதிலிலை
மாதிரி இருக்கே..ஏன்?
-
‘என் பெர்சனாலிட்டி என்ன..அவ பெர்சனாலிட்டி என்ன…சினிமா
நடிகை மாதிரி இருக்கிற நான் எங்கே…வத்தலும் தொத்தலுமா
கரிக்கட்டை மாதிரி இருக்கிற அவ எங்கே..அப்படியிருக்கிறப்ப
அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்…’’
-
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் ஆர்த்தி!
-
===========================================
>இரா.வசந்தராசன்

எழுதியவர் : இரா.வசந்தராசன் (23-Dec-13, 4:17 pm)
பார்வை : 133

மேலே