யாரிவளோ
பைங்கிளிப் பாவையாய்
நெஞ்சம் பறித்தாள்..
பதின் பருவக்குமரியாய்
என்னை அளந்தாள்..
என் வாழ்விலும் வானிலும்
வைகறையானாள் ..
விடியலாய் வந்தவள்
விடியலைப் புகுத்தினாள்..
முடிவென்பதிலா என் வினாக்களுக்கு
ஒரே விடையானாள்..
என் கடிகாரத்தில்
நொடி முள் ஆன அவள்,
என் மார்கழியில்
முன் பனியானாள்!
என் சுவாசம் பறித்து
மூச்சில் கலந்தாள்..
என்னில் ஒன்றானவள்
அவள் !
வேறு யாருமின்றி
அவள் என்னவளே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
