என்னை ஏங்கவிட்டு ஏன் சென்றாய் - குமரி பையன்

என்னோடு உனக்கு ஏனிந்த கோபம்
எப்போதும் உள்ளத்தால் நான் ஒரு பாவம்..!
எனை உதறி சென்றது உன் கோபம்
என் உள்ளம் தேடுதே உன்னை பாவம்..!

எங்கெல்லாம் தேடினேன் பெண்ணே
என் விழியில் நீரில்லை கண்ணே..!
உயிர் மூச்சை தொட்டு பார் முன்னே
உன் பெயரைத்தான் சொல்லுது பொன்னே.!

உன் சிரிப்பொலியில் நான் சிரிக்க கண்டேன்
உன் நெஞ்சொலியில் நான் துடிக்க நின்றேன்..!
உன் கைபிடிக்க துணைக்கழைத்து வந்தேன்
உன் அழகினிலே ரசித்து எனை கொன்றேன்..!

பதினைந்தாம் நிலவாய் எனில் இருந்தாய்
பல மோகத்தில் நுழைந்து வலம் வந்தாய்..!
இரவெல்லாம் நீ விளையாடி கொண்டாய்
இதயத்தில் உனை உறக்காட்டி வென்றாய்..!

பாதத்தின் சிலம்பொலியால் அழைத்தாய் !
பக்கத்தில் வந்தணைத்துக் குழைந்தாய்!
வீணைபோல் கையில்உனைத் தந்தாய்
மீட்டுகையில் ஏனெழுந்து சென்றாய்..!

உன் கண்ணில் நான் ஒளியாகி நின்றேன்
உன் இதழில் நான் சிரிப்பாகி சிரித்தேன்.!
உன் நிஜத்தில் நான் நிழலாகி வந்தேன்
உன் பிரிவால் நான் உதிர்ந்து போனேன்..!

உன் மண(ன)ம் கண்டு ஓடிவந்தேன் தனியே
உன் இருப்பில் சுவையில்லை கனியே..!
உன் உடலெல்லாம் நடுங்குது மணியே
உன் விழியால் ஒளிதருவாய் கருவிழியே..!!

எழுதியவர் : குமரி பையன் (24-Dec-13, 1:30 am)
பார்வை : 335

மேலே