எச்சரிக்கை
பேராசை சுயநலம் 
தீய எண்ணம் சாதிப் பேய் 
இவற்றை எல்லாம்
தீயிட்டுக் பொசுக்குங்கள்;
மனம் தூய்மைப் படவேண்டும் 
மதம் பக்தி ஆகியவற்றை
மனத்திலே பூட்டிவையுங்கள்.
எங்கும் நிறைந்தவன் 
உங்களுக்குள் இருப்பவன்
அவனைத்தேடி நேரத்தை
வீணடிக்க வேண்டாம்.
உழைப்பவர் நெஞ்சம்தான் 
அவனுறையும் ஆலயம். 
ஏய்த்துப் பிழைப்பவரும் 
அவன்பேரை அடிக்கடி உச்சரிப்பார்
அவரிடம் வீழாதிருக்க 
அதுவே நமக்கு எச்சரிக்கை.
 
                    

 
                             
                            