தேடல்

எதிர் வரும்
முகங்களில் எல்லாம்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நான் தொலைத்த
உந்தன் முக சாயலை...........

என் பால்யத்தின் நண்பன் அவன்
பாதி படித்து மீதி படிக்காத
புத்தகம் போலே என் நினைவினில்
எப்போதும் இருப்பவன்..........

முகம் கூட நினைவினில் இல்லை -
ஆனாலும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்

எழுதியவர் : (24-Dec-13, 3:55 pm)
Tanglish : thedal
பார்வை : 133

மேலே