யதார்த்தத்தின் யாதனைகள்---அஹமது அலி----

வேரினை வெட்டும்
கோடரியின் செயலை
பொருட்படுத்தாமலே
பழமெடுக்கவும்
விறகொடிக்கவும்
முனைப்பு காட்டின
சுற்றியுள்ள கூட்டம்....!!!
0)))
இடிமேல் இடிகள் தலையில்
இறங்கிக் கொண்டிருக்க
அபாயக் குரலும்-பிறருக்கான
எச்சரிக்கை குரலும்
எழுப்பத் தடையென்று
இயற்கை மின்னலாய் மின்னி
மிரட்டுகிறது....!!!
0)))
பாம்பு கொத்தியது காலில்
பதறித் துடித்தான் கடிபட்டவன்
கொத்தியது நல்ல பாம்பென்று
பாம்புக்கு நற்சான்று தந்து
நடையை கட்டுகிறான்
நல்ல மனிதன்.....!!!
0)))
கழுத்தில் இறங்கிக் கொண்டிருந்த
கத்தியினால் உயிரின்
முணங்கலை கேட்ட மூன்றாமவன்
கொலையென்று கத்தி விடாதே
அவனும் நம் சகோதரன் என்று
சமாதானக் கத்தியை
தன் பங்கிற்கு இறக்கினான்.......!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (25-Dec-13, 7:37 am)
பார்வை : 232

மேலே