புறப்படு பெண்ணே

பெண் என்று சொன்னால்,
விடியலுக்கு முன்னே கண் விழித்து
விழிகளை ஒளியாக்கி
இந்த பூமியை ஒளிர வைப்பவள்
அதனால் தான் என்னவோ
அவள் விழிகள்
மான்விழி என்று அழைக்கப்படுகிறதோ
புரியவில்லை..........



பெண்ணே உன் சக்தியின் வீரியம்
சிகரத்தை மட்டுமல்ல,
அதையும் தாண்டி
தொடுவானத்தையும் தொட்டு விட்டது.
எங்கும் எதிலும் உன் சக்தி உயர்ந்து நிற்கிறது
எனவே தான் உன் மனதின் ஆழம்
உன் அன்பின் ஆழமாய் வெளிப்படுகிறது
மழலையாய்,மகளாய்,தாயாய்,மருமகளாய்,
மாமியாய்
எத்தனை எத்தனை வடிவங்கள் உனக்கு........



நீ நினைத்தால்
எழுதுகோலையும் எடுப்பாய்
எதிரியையும் அழிப்பாய்
அமைதியின் பூவாய்
அன்பில் நிகரில்லாமல்
அழிக்க நினைத்தால் பூகம்பமாய் எழும் நீ
பொறுத்தது போதும்
பொங்கி எழு
அடிமைத்தனத்தை அடியோடு அழித்தெறிய
விழித்தெழுந்து வா.......



இந்த பூமியை
பொன்னான பூமியாய் மாற்ற
புறப்படு பெண்ணே புறப்படு...........
உன்னால் ஆக்கவும் முடியும்!
அழிக்கவும் முடியும்!
அமைதி காத்தது போதும் உன் சமுதாயத்தை
மாற்ற விழித்தெழுந்து
வா பெண்ணே வா.............

எழுதியவர் : (27-Dec-13, 2:48 pm)
பார்வை : 151

மேலே