காதல் -கலைமான்

கலைமான்
நான் - என
துள்ளிக் குதித்து
வந்தாள்
ஏனோத் தினம்
என்னைக் கண்டு
நாணம் கொண்டாள்
தன் - செவ்வாய் திறந்து
புன்னகை பூத்து
புனிதன் - நெஞ்சைக் கெடுத்து
மனிதனாக்கினாள்
பின் - தன்
உடற்பொலிவைக்காட்டி
முனிவன் நெஞ்சில்
காமத்தை ஊட்டி
கவிஞனாக்கினாள்
விடாப்பிடியாய்
வஞ்சித்து - என்னை
காதல் வலை வீசி
இழுத்து பிடித்து
இதழ் மதுவுண்டு
நீ - செல்லென்று
கூசாமல் கூறினாள்
இரவானால்
என்னருகில் வந்து
கிழக்கே வெளுக்கும்வரை
தெவிட்டாத சுவைதந்து
தனியாய் - என்னை
தவிக்க விட்டுவிட்டு
நதியாய்
எழுந்து ஓடினாள்
அவளை - நான்
எப்படி மறப்பேனாம் ?!