உயிராய் உடன் பிறவா தங்கை - அன்பில் உயிர்க்கும் அண்ணன்

என் உயிராய் உடன் பிறவா தங்கை

சிறுவயது முதலே
சில உறவால் ஒதுக்கப்பட்டவன்
அன்பையும் அக்கறையையும் தேடி தேடி
அலைந்தவன் நான்

மூன்று வருடம்
இளைய தங்கையே !!
நான்கு வருடம் முன்புதான்
நாம் பழக துவங்கினோம் ..!

"அண்ணா" என்று அழைப்பாள்
அதில் அப்படி ஒர் அழகும் அன்பும் !!


உன்னுடன் பேசி மகிழ்வதையே
என்றும் இன்பமாய் கொண்டவன் நான்

எதை கேட்டாலும் - நீ
நீண்ட நேரம் யோசிப்பாய் - இறுதியில்
"தெரியவில்லை அண்ணா " என்பாய்...!!

பேசுங்கள் அண்ணா என்பாய்
ஆனால் நீ பேச மாட்டாய் .!
ஏன் என கேட்டால்
"நான் சின்ன பிள்ளை" என்பாய்..!!

சாப்பிடுங்கள் என்று மட்டும்
சொல்லவில்லை
உனக்காக சமையுங்கள் என்பாய் ..!

இப்படி எல்லாம் உன் அன்பில்
என்னை வாழ வைத்தாய் தங்கையே..!!

ஏன் தங்காய் - இப்போது மட்டும்
காரணமின்றி பேச மறுக்கிறாய்..!!

காதல் கூட கரைந்து விடும் - ஆனால்
உன் அன்பு அழியாது !!

காதலை விட
சில உறவால் ஒதுக்கப்பட்டவன் - மட்டுமே
வாழ்க்கையை வெறுக்கிறான்
அன்பை தேடி தேடி அலைகிறான் !!

நீ என்னுடன் பிறக்கவில்லை
என்று யார் சொன்னார்கள்
இதோ என் உயிராக வாழ்கிறாய்

என் விழிகள் - உன் புன்னகைக்காகவும்
என் செவிகள் - உன் சிரிப்பொலிக்காகவும்
காத்திருக்கின்றன தங்கையே
இதோ அன்பில் உயிர்க்கும் அண்ணன்

------- என் உயிராய் வாழும் உடன் பிறவா
தங்கை சங்கீதாவிற்கு சமர்பணம் -------

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (28-Dec-13, 2:25 pm)
பார்வை : 22399

மேலே