நேசங்களை மாற்றிய தேசம்

சற்று நேரம் கழித்து அலுவலகத்தில் நுழைந்தேன்.

'என்னா சார் லேட்?'

'நண்பர் போன் பண்ணார், யாருக்காவது ஒரு சாப்பாடு வாங்கி குடுக்கச் சொன்னார், அதான் கோயிலுக்கு எதித்தாப்பல ஒரு அம்மா இருந்திச்சி. அதுகிட்ட கொடுத்து வந்தேன். ஆனா என்ன வேடிக்கைன்னா அது பிச்சகாரி மாதிரியே தெரியல, ஹின்டு படிக்குது'

'ஓ அந்த டாக்டர் அம்மாவா'

எனக்கு தலை சுற்றியது.

'என்னங்க சொல்றீங்க'

'மேட்டர் தெரியாதா, அது 'GH'ல ‘Professor'. இப்பவும் சீனியர் டாக்டர் எல்லாம் வந்து 'consultation'னு வராங்க. பசங்க எல்லாம் காச வாங்கி அத விரட்டி விட்டாங்க, அட போங்கடான்னு அந்த அம்மாவும் வெளில வந்திருச்சி . இப்ப மழை பெய்யுதுன்னு பெசன்ட் நகர் ''bus depot" ல படுத்துக்கிடக்குது.

காலம் கனக்கச் செய்யும் பொழுதுகளில் கண்களிலும் ஈரம்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (28-Dec-13, 3:53 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 689

சிறந்த கட்டுரைகள்

மேலே