ஆகச் சிறந்த நற்கவி வேந்தர் 2013-நன்றி
முதலில் தளத்திற்கு நன்றி....... என்னை போல் எத்தனையோ பேர் தனக்கு தெரிந்த எழுத்தை யாரிடமாவது காட்டி ஒரு பாராட்டுதலோ.... ஒரு கை தட்டலோ.....அல்லது ஏதாவது ஒரு வகை உற்சாகத்தையோ பெற்றுவிட மாட்டோமா..... என ஏங்கி தவிப்பதை என்னை போல் உள்ளவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும்......... எழுத்துக்கும் புரிந்திருக்கிறது.........ஏதோ செய்து விட்டார்கள்...... என்னை போல் உள்ளவர்களும் ஏதோ செய்கிறோம்.........ஏதாவது செய்வது தானே வாழ்க்கைக்கான அர்த்தம்.....எத்தனை விதமான படைப்புகளையும் படைப்பாளிகளையும் எழுத்தில் பார்க்க முடிகிறது....எல்லாமே பாடங்கள்....... இன்னும் இன்னும் எழுத படிக்க கிடைத்த அறிய பொக்கிஷம் எழுத்து......
2013 மார்ச்சில் தான் இப்படி ஒரு தளம் இருப்பது எனக்கு தெரிந்தது..... முன்பே தெரியாமல் விட்டதற்கு வருந்துகிறேன்......அள்ள அள்ள குறையாத அமுத சுரபியை விடக் கூடாது என்றே தொடர்ந்தேன்.....இதோ தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்...... இறகை தேடும் பறவை போல மனம் தேடிக் கொண்டே இருக்கிறது....... கனவை தேடும் இறகை போல வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது.......
ஓட்டத்தின் இளைப்பாறுதலாக ..... முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களை தலைவராக கொண்ட, முனைவர் பா. இரவிக்குமார் அவர்களை துணைத் தலைவராக கொண்ட,சீனு தமிழ்மணி அவர்களை செயலராக கொண்ட,தி. அகன் அவர்களை அமைப்பாளராக கொண்ட இணையதள படைப்பாளிகள் பேரவை, புதுச்சேரியிலிருந்து,ஆகச் சிறந்த நற்கவி வேந்தர் 2013 என்ற பட்டத்தை எனக்கு தந்து பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஆம்.... இது இளைப்பாறுதல் தான்.... இன்னும் வேகம் கூட்டி எட்டு வைத்து ஓடு என்பதற்கான உற்சாக பானம் என்றே கருதுகிறேன்....வேர்த்து பூத்து மூச்சு வாங்குபவனுக்கு விசிறி வீசி விடுவதாகத்தான் நினைக்கிறேன்.....நிச்சயமாக மனம் குளிரத்தான் செய்கிறது...... இன்னும் பலம் அதிகமானது போல ஒரு எண்ணம் வரத்தான் செய்கிறது.. ஆனால் இதோடு தேங்கி விடக் கூடாது என்பதாகவும் ஒரு எண்ணம் எச்சரிக்கை விடுக்கிறது....நம்மை ஒரு சான்றோர் கூட்டம் கண்காணிக்கிறது...... எதை வேண்டுமானாலும் எழுதி விடக் கூடாது என்றும் ஒரு எண்ணம் தோன்றுகிறது. என்னைப் போல் எழுத்துலகத்தில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பட்டம், விருது என்பதெல்லாம் விரல் பிடித்து சற்று நடை பழக்கி விடுவதாகத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.....
என் படைப்புகளுக்கு கருத்துகள் மூலம் ஊக்கம் தந்து கொண்டே இருக்கும் என் எழுத்துலக தோழர் தோழியர்களுக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன்..... தொடர்ந்து வாருங்கள்.....முன்னேறுவோம்......எழுத்து தளமும் சரி..... இணைய தள படைப்பாளிகள் பேரவையும் சரி.....சக எழுத்து தோழர் தோழியர்களும் சரி.... இன்னும் இன்னும் தங்கள் கடன் பணி செய்து கிடப்பதாகவே இருக்கட்டும்... தமிழை நாம் வாழ வைக்காமல் பின் யார் அதை செய்வார்கள்.....
ப்ரியமுடன்
கவிஜி