வளர் பிறை-28

ரகுவையும், ரவியையும் பார்த்த குணசேகரன் இனி என்ன என்ன நடக்குமோ என்று வியந்தார்,,,,, இருப்பினும் தைரியத்தை வர வரவழைத்து கொண்டு,


"அட பாவிகளா!!!! ஏன் டா,,,, இவ்ளோ அராஜகம் பண்றீங்க,,,,,,"- கண்ணீருடன் கேட்டார்

"ஆமா,,,,,,, ஆமா,,,, அராஜகம் தான்,,,, இந்த உலகம் பணம் இருக்குறவனுக்கு தான் சொந்தம்,,,, நாங்க சொல்ற படி தான் அரசாங்கமே நடக்குது,,,,,,, ஆப்ட்ரால் வாட்ச்மேன் நீ,,,,,,, நீ என்ன உள்ள தள்ளிடுவியா,,,,,, ஹே ஜெனிய நான்,,, இதோ இருக்கானே ரவி, அப்புறம் இந்த தினகரன்,,,, அப்புறம் இந்த செல்வம் எல்லாரும் சேந்துதான் கொன்னோம்,,,, இப்போ என்ன டா பண்ணுவ,,, உன்னால என்ன பண்ண முடியும்,,,,,,, இந்த கேஸ் ஜெனி செத்துட்டானு இல்ல ஜெனி காணாம போயிட்டன்னு தான் இருக்கு,,,,, இனி எந்த கொம்பன் வந்தாலும் என்ன ஒன்னும் செய்ய முடியாது"- இறுமாப்போடு சொன்னான் கணேஷ்

"வெல் செட் கணேஷ் இதுக்காக தான் நான் காத்துட்டு இருந்தேன்"- பதிலளித்தார் குணசேகரன் பெயர் தாங்கிய போலீஸ் நரேந்திரன்



மகளை காணவில்லை இங்கோ பலிபீடம் போல பூஜை அலங்கரித்து வைத்தார் சாமியார் என்ன செய்ய ஒன்றும் புரியாமல் ஜோதியின் பெற்றோர்

அவரின் மந்திர உட்சாதனங்கள் நல்ல வேலை செய்ய தொடங்கியதாக அவரே அறிவித்து கொண்டார் ஆனால் குணசேகரனுக்கு அதில் துளியும் விருப்ப மில்லை

ஜெனியின் ஆவியே அவளின் கொலையை கண்டு பிடிக்க செய்த சூழ்ச்சி தானே இதிலென்ன பூஜை என்று கொஞ்சம் தள்ளியே இருந்தார்

ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது,,,,,,,,,,,,,,


ஜெனியில் வீட்டை அடைந்த ஜோதி அவளின் அன்னையை கண்டதும் கண் கலங்கினாள்,,,,,,,,

"யாருமா நீ,,,,,,, இந்த ராத்திரில வந்துருக்க??"- கனிவோடு தான் கேட்டார் ஆனால் முகத்தில் மலர்ச்சி இல்லை,,,,,,, ஜெனி என்ற பூவோடு அந்த வீட்டின் மலர்ச்சியும் சேர்ந்தே மடிந்துவிட்டது


"அம்மா நான் தான்மா ஜெனி"- கண்ணீரோடு சொன்னாள் ஜோதி

"என்ன மா சொல்ற நீ ஜெனியா??,,,"- ஒரு வெற்று சிரிப்பு அவள் அன்னையின் முகத்தில்

"உன்கிட்ட யாராவது எங்க ஜெனிய பத்தி சொன்னாங்களா மா,,,, அவல பத்தி தெரிஞ்சிகிட்டு இங்க வந்து நீ தான் ஜெனின்னு சொல்றியா??? உனக்கு ஏதும் பணக் கஷ்டமாமா"- கனி குறையாமல் கேட்டார்

அதற்குள் அங்கு வந்து சேர்ந்தார்கள் ஜெனியின் குடும்பத்தினர் அனைவரும்,,,,,,,,,

எல்லாரிடமும் தான் தான் ஜெனி என்பதை ஜோதி நிரூபித்தாள்,,,,,,,,,,,,,,,,,

(வளரும்,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (28-Dec-13, 3:54 pm)
சேர்த்தது : nilamagal
பார்வை : 116

மேலே