வழியா குழியா

கதவு தட்டும் சத்தம் இரவு மணி 1.00am கதவை திறந்து பார்த்தால் குடி போதையில்

என்

கணவர் : என்னை எவ்வளவு நேரமா கதவ திறக்க ?
மனைவி : இல்லங்க தூங்கிகிட்டு இருந்தேன் ?
கணவர் : என்னடி புருஷன் நான் வர்றதுக்குள்ள தூக்கம் ? சொல்லுடி ?
மனைவி : இல்லங்க நீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணிகிட்டு தான் இருந்தேன் அப்படியே தூங்கிட்டேன் ..
கணவர் : சரி சரி போய் சாப்பாடு எடுத்து வை ..
மனைவி : சரிங்க...

இது தினமும் எங்கள் வீட்டில் நடக்கும் ஒரு விஷயம் எதற்கு என்ன தீர்வு பல வழி முறைகளை கையாண்டு விட்டேன் ஆனால் என் கணவர் குடிப்பதை மறக்கவில்லை ஆனால் என் வீட்டில் உள்ளோர் அனைவரும் பெண்ணால் முடியாதது ஒன்றும் இல்லை முயற்சி செய் என்கிறார்கள்...

எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக கடைத்தெருவில் பொருட்களை வாங்கி கொண்டிருந்தேன் ..
அப்போது கடைகாரர் என்னம்மா மயக்கத்துல இருக்கியா என்றார் ..எனக்கு ஒன்றும் புரியவில்லை ..என்ன என்று கேட்டேன் அப்போது அவர் 50 ரூபாய்க்கு 5 ருபாய் கொடுக்குறியே என்றார் ...சட்டென்று சாரிங்க் என்று சொல்லிவிட்டு அவரிடம் 50 ருபாய் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தேன் ...

வழக்கம் போல் என் கணவர் குடித்து விட்டு வீட்டிக்கு வந்தார் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு உறங்கினார்...

மறுநாள் காலை மணி 8:00am
என் கணவர் : கல்பனா என்னோட purse அ பாத்தியா என்றார்
இல்லைங்க என்றேன் ..
என் கணவர் : எப்படி காணாம போச்சு அதுல எல்லா கார்டும் அது மட்டும் இல்லாம என்னோட driving licence இருக்கு கொஞ்சம் தேடு என்றார் நானும் அவருடன் தேர்ந்து தேடினேன் ஆனால் கிடைக்க வில்லை ..
என் கணவர் : சரி நான் கிளம்புற நீ கிடைச்சா எடுத்து வை என்றார் நானும் சரி என்றேன் ..

மாலை மணி 7;00pm கதவு தட்டும் சத்தம் வழக்கத்திற்கு மாறாக என் கணவர் : என்னடி purse கிடைச்சிதா என்றார்
இல்லைங்க வீடு முழுக்க தேடி பாத்துட்டே சரி அது இருக்கட்டும் நீங்க என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டிங்க ? என்றேன் ஆமா வேலை முடிஞ்சிடுச்சி அது தான் சரி காசு எதாவது வெச்சிருக்கியா என்றார் " எங்கிட்ட ஏதுங்க காசு நீக தான் எல்லாம் வாங்கி கொடுத்துடுறிங்க அப்புறம் எதுக்கு காசு ?"
என் கணவர் பணம் எதிர்பார்ப்பது கண்டிப்பாக குடிப்பதற்குத்தான் அதனால் தான் நானும் பணம் இல்லை என்றேன் ஆனாலும் என் கணவரை பார்க்க எனக்கு பாவமாக இருந்தது உடனே கையில் இருந்த வளையலை கழற்றி இந்தாங்க உங்களுக்கு எதுக்கோ பணம் தேவைன்னு நினைக்கிறன் இப்போதைக்கு எதை வெச்சி பணம் எடுத்து கொள்ளுங்கள் என்றேன் ...
இல்லை இல்ல வேண்டாம் என்றவர் சரி நாம் போய் கொஞ்ச நேரம் படுக்குறேன் என்று கூறி படுக்கை அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் கல்பனா எங்க வா என்றார்..
நானும் சென்றேன் அப்போது..

என்ன பண்றதுன்னு தெரியல கல்பனா நாளைக்கு என்னோட chief நாளைக்கு அவரோட locker ல இருக்குற சில documents எடுக்குறதுக்கு வர்றார் அதுக்கு 3 scan card வேணும் அதுல ஒன்னு என்கிட்டே இருக்கு ஆனா அது என்னோட purse ல இருக்கு இப்ப அது இல்லன்னா என்னோட வேலை கண்டிப்பா போயிடும் அதுக்கப்புறம் நான் ...தப்பு பண்ணிட்டேன் பொறுப்பான பழக்கத்தால எப்படி பொருள தவற விட்டுட்டேன் இனிமே குடிக்க மாட்டேன் என்றார்...
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இருந்தாலும் அவர் சொல்வதை உறுதிபடுத்துவதற்காக சரிங்க நீங்க குடிக்கிறதை நிறுத்துவதற்கும் உங்க purse தொலைந்ததற்கும் என்ன சம்பந்தம் என்றார் ..
இல்லடி என்னோட chief நாளைக்கு US ல இருந்து வந்து அந்த DOCUMENT எடுத்து கோர்ட்ல SUBMIT பண்ணனும் அப்படி பண்ணலன்னா அவரோட சொத்து GOVERNMENT சரியான சொத்து ஆதாரம் இல்லததர்க்காக ஜப்தி பண்ணிடும் அப்படி பண்ணிட்டா நான் ஜெயிலுக்கு தான் போகணும் அதனாலதான் சொல்றேன் முக்கியமான பொறுப்ப கைல வெச்சிகிட்டு குடிச்ச எனக்கு எவ்வளவு பெரிய தண்டன பாத்தியா என்றார் ..
எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை ..
நானும் கடவுளிடம் வேண்டினேன் ..
ஆனால் அவரோ இரவு முழுதும் தூக்கம் இல்லாமல் அங்கும் இங்கும் அவருடைய PURSE ஐ பற்றியே நினைத்துகொண்டிருந்தார் ..
காலை 8;00AM .
சரி நான் OFFICE க்கு போயிட்டு வர்றேன் என்று கிளம்பினர் என் கணவர் ..
மதிய வேலை தொலைபேசி மணி ஓசை மறுமுனையில் " கல்பனா என்னோட PURSE கெடச்சிடுச்சி என்னோட MD கொடுத்தாரு அவருக்கு தெரிஞ்சவங்க யாரோ என்னோட PURSE ல அவரோட கம்பெனி அட்ரஸ் பாத்துட்டு வீட்டுக்கு நேத்து எடுத்துட்டு வந்து கொடுத்திருக்காங்க " என்றார் மகிழ்ச்சியோடு ...

என்னங்க நான்தான் PURSE அ எடுத்து ஒளிச்சி வெச்சிருந்திருப்பன்னு அதையும் நான் தான் அவரோட MD வீட்டுக்கு கொடுத்து அனுப்பிருப்பன்னு GUESS பண்ணிட்டிங்களா ....
ஆமாங்க நான் தான் ...அப்படி செய்தேன் ..

குடிக்கிறவங்கள திருத்தனும்னு ஒரு நோக்கம் இருந்தாலும் ...சொல்ல வர்ற கருத்து

உங்கள நம்பி பல பொறுப்புகள் இருக்கு அதை சாதாரணமா குடி பழக்கத்தால தவற விட்டுட்டீங்கன்னா அதனால பாதிக்க படப்போவது நீங்க மட்டும் இல்ல உங்கள சுத்திருக்கவங்களுந்தான் ....

" உங்க உலகம் சுத்தணும்னு நீங்க குடிக்கிரதனால எத்தனை தலைங்க சுத்துது பாத்திங்களா..."

" போதை இல்லா வாழ்க்கை நல்ல பாதைக்கு போடும் வழி "..
" போதையோடு வாழ்க்கை நல்ல பள்ளத்துக்கு தோண்டும் குழி "...

வழி வேண்டுமா இல்லை குழி வேண்டுமா ?

எழுதியவர் : சாமுவேல் (28-Dec-13, 3:39 pm)
பார்வை : 142

மேலே