வளர் பிறை -29

குணசேகரின் பெயர் தாங்கி வந்த போலீஸ் நரேந்திரன்,,,,,,, தன சுய முகத்தை உரித்து காட்டினார்,,, அதை பார்த்த கணேஷ்க்கு அதிர்ச்சி,,,,,,
சுற்றி இருந்த இடமெல்லாம் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன

அங்கே இருந்ததோ மொபைல் கோர்ட் என்று அழைக்கப்படும்,,,, நீதிமன்றம்

அதை பார்த்த கணேஷின் இதயமே நின்று விட்டது
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவனது வாக்கு மூலங்களாய் பதிவானது

அவன் சொல்ல வேற ஏதும் பாக்கி இல்லை,,,,,,,, அவன் கைகளுக்கு விலங்கு தானாய் வந்தது அப்படியே தினகரன் மற்றும் செல்வத்தில் கைகளுக்கும்,,,,,,,,

"இந்த குற்றத்த இனி நான் மறைக்க போறதில்ல ஆனா இதுல ரவியும் சம்பந்த பட்டிருக்கான் அவனையும் கைதுபண்ணுங்க"- தனது நட்பை காட்டினான் கணேஷ்

நீதிபதி உத்தரவிட்டார்,,,,,,,,,, அச்சிடெண்ட் கமிஷனர் ரகு உங்க அண்ணனை கைது பண்ணுங்க,,, நின்று கொண்டிருந்த ரகு மூட்டையில் மயங்கிய நிலையில் இருந்த தனது அண்ணன் ரவியை கைது பண்ணினான்,

அதை பார்த்து திகைத்து நின்றான் கணேஷ்,,,,,,,,

"என்ன பாக்குறீங்க ஆள் மாறாட்ட வேல உங்களுக்கு மட்டும் தான் பண்ண தெரியுமா,,,,,,,,ம்ம்"- சிரித்தான் ரகு

"நீ எப்படி எப்படி,,,,,,,,,"-திணறினான் கணேஷ்

"நான் எப்படி தப்பிச்சேன்னு கேட்குறியா,,,,,, சொல்றேன் முதல நான் ஏன் இங்க வந்தேன்னு சொல்றேன்

ஊட்டில இருக்குற உன்னோட கான்வேன்ட்க்கு வர பொண்ணுங்க நெறைய காணாம போறதாகவும் , அவங்களோட ஆபாசபடம் இணையத்துல வரதாகவும் எங்க டிபர்ட்மெண்டுக்கு தகவல் வந்தது அதை கண்டு புடிக்க சிபிஐ அனுப்புன ஆள் தான் நான்

இங்க வந்ததுக்கு அப்புறம் ஜெனி காணாம போன வழக்கு அதுல என்ன விசாரிச்சாங்க அந்த விசாரணை எனக்கே திருப்தி கரமா இல்ல போலீஸ் இந்த கேஸ் க்ளோஸ் பண்ண போறாங்கனு தெரிஞ்சிது

அதனால நானே என் மேல் அதிகாரிகள்ட permission வாங்கி ஜெனியோட வழக்க விசாரிக்க ஆரம்பிச்சேன்,,,,,,, மிஸ்டர் பிரதாப்"- அழைத்தான்

"எஸ் சார்"- வந்து நின்றார் பிரதாப்

"இவர உனக்கு தெரியுதா,,,,,,,, ஜெனி கேஸ் விசாரிச்ச இன்ஸ்பெக்ட்டர்,,, இவருக்கு நீ கொடுத்தது 5 லட்சம் ரூபா,,,,,,,

இவர் நேர்மையான ஆபீசர் அத நேர சிபிஐ ட்ட ஒப்படைச்சிட்டாறு,,,,,,, அங்க தான் உன் மேல எனக்கு சந்தேகமே வந்தது,,,,,,,, ஏனா வெறும் ஆள் தொலஞ்ச கேஸ் க்ளோஸ் பண்ண யாரும் இவ்ளோ செலவு பண்ண மாட்டாங்க

அப்புறம் ஜோதியோட உதவியோட தினகரன்ல ஆரம்பிச்சி என் அண்ணன் வரைல எல்லாரும் மாட்டிகிட்டிங்க"

"அப்போ அன்னைக்கு என் வீட்டு ரூம்ல அடைச்சி வச்சது"- கேட்டான் கணேஷ்

"சாட்சாத் அது நானே தான்,,,,,,,,, என் அண்ணன் என்ன அடச்சி வச்சிட்டு,,,,, தன்னை ரகுன்னு சொல்லிக்கிட்டு குணசேகர பாத்தது என்னமோ உண்மைதான்,,,

ஆனா அன்னைக்கு அவன் உன்ன பாக்குறதுக்கு முன்னால என்ன தான் பாக்க வந்தான்,,, அங்க தான் அவன் தப்பு பண்ணிட்டான்

அவன் அந்த சிரிஞ்சி ஊசில ஸ்லொவ் பாய்சன் கொண்டு வந்து எனக்கு போட்டு கொல்ல பாத்தான்,,,,,,, நான் போலீஸ் ட்ரைனிங்ல கத்துகிட்டது என்ன தெரிமா
எதையும் நம்ம வசதிக்கு யூஸ் பண்ணிக்கணும்

நான் அவனை தாக்கிட்டு அந்த ஊசிய அவனுக்கு போட்டு அவனை நான் ஆக்கி கட்டி போட்டேன்,,,,,,, அந்த ஊசிக்கு இரண்டு நாள் வரை மனுஷனை உயிரோடா வசிக்கிற வல்லமை இருக்கு,,,, இப்போ அவனுக்கு ஹோச்பிடல்ல ட்ரீட் மெண்ட் நடக்கும்,,, கவலையே படாத உன் friend ஒரு 2 மாசத்துல எல்லாம் ஜெயிலுக்கு வந்துடுவான்,,,,,, அப்பரம் உங்க மூணு பேருக்கும் மரண தண்டனை காத்துட்டு இருக்கும்,,,,,,,, ஆல் தி பெஸ்ட்"- சொல்லி முடித்தான் ரகு

அவன் சொன்னது போல கணேஷ், தினகரன் மற்றும் ரவிக்கு மரண தண்டனையும் கொலைக்கு உடந்தையாக இருந்த செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது


ஒரு புறம் பிரச்சனை முடிந்திருக்க அந்த சாமியாரின் மாத்திரம் ஜெனியின் மீது செயல் பட ஆரம்பித்தது

ஜோதி ஜெனியின் நடவடிக்கைகளை கூறி அவளை ஜெனி என நிரூபித்தாள்,,,,,,,,, அந்த மந்திர வேகத்தில் தள்ளாடிய ஜெனி

"அம்மா நான் செத்துட்டேன் என்ன பொதச்சிடாங்க
நான் போய்டேன்,,,,,, நீங்க வருத்த பட கூடாது"- சொல்லிக்கொண்டே காற்றில் கரைந்து போனாள்

"ஜெனியின் குடும்பமே கண்ணீரில் மூழ்கியது "


ஒரு வாரத்திற்கு பின்,

ஜெனியின் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் சகல சடங்குகளோடு அடக்கம் செய்திருந்தனர்

அவளின் அழகிய உடலின் நிலை அன்று அரைகுறையாக செல்லரித்து இருந்தது

போஸ்ட்மார்டம் செய்த டாக்டரிடம் ரகு கேட்டான்,,, "டாக்டர் ஜெனி உடம்ப பொதச்சி 2 வருஷம் இருக்கும் தவிர துண்டு துண்டா வெட்ட பட்ட உடம்பு வேற எப்படி அழிஞ்சி போகாம இருந்துச்சி"

"அவங்க அந்த பொண்ண பொதைக்கும்போது உப்பு கொட்டி பொதச்சிருக்காங்க உப்புள கெடக்குற எந்த பொருளும் ரொம்ப நாள் கெடாம இருக்கும்,,, அதே தான் ஜெனி விஷயத்துலயும் நடந்துருக்கு,,, அத பத்துன புல் ரிப்போர்ட் இதுல இருக்கு"- ஜெனியின் போஸ்ட் மார்டம் ரிபோர்டை அளித்தார் டாக்டர்

அதை எடுத்து கொண்டு வந்தான் ரகு எதிரே ஜோதி,,,,,,,"வாங்க ஜோதி என்ன இந்த பக்கம்"

"ஜெனியோட கல்லறைய பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"எனி வே ரொம்ப தேங்க்ஸ் ஜோதி நீங்க மட்டும் இல்லனா ஜெனி இறந்த விஷயம் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும்"


இருவரும் பேசிக்கொண்டே நடக்க கண்ணெட்டும் துரத்தில் ஜெனியின் கல்லறை , அது பூக்களால் அலங்கரித்து காணப்பட்டது

அதன் அருகில் சென்றனர் இருவரும்,,,,,,,,,

"பெண்ணிற்கு அழகு வரமா ?? சாபமா??""

-என்ற கேள்வியோடு அந்த கல்லறையையே பார்த்து கொண்டிருந்தான் ரகு

அப்போது ,

"ரகு"- அழைப்பு

திரும்பி பார்த்தான்

ஜோதியின் முகத்தில் சிரித்தாள் ஜெனி


*************************(முற்றும் )***********************************

எழுதியவர் : நிலா மகள் (28-Dec-13, 4:42 pm)
பார்வை : 169

மேலே