கலா காத்திருந்தாள் கணேசனுக்காக
கலா தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.எ. ஆங்கிலம் படித்து வந்தாள் ....கலாவிற்கு தாய்மாமன் (கணேசன் ) கணேசனை ரொம்ப பிடிக்கும் ....கணேசன் மேல் கலா உயிராக இருந்தாள் .கணேசனுக்கும் கலாவை ரொம்ப பிடிக்கும் ....
கணேசன் தன் அக்காவிடம் கேட்டு கலாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி கொண்டான் ...
கலா படிப்பு முடிந்தவுடன் கலாவை திருமணம் முடிக்கலாம் என்று கணேசனும் காத்து கொண்டிருந்தான் .....
இருவரும் கைபேசியில் உரையாடி கொள்ளுவார்கள் .......
பல நாட்கள் கணேசனும் கலாவும் பல இடங்கள் செல்வதும் , படம் பார்ப்பதும் , ஹோட்டலுக்கு போவதுமாய் சந்தோசமாக இருந்தனர் .....
கலாவிற்கு படிப்பு முடிந்தது ...
கலாவின் அம்மா .ஜாதகத்தை கொண்டு
திருமணத்திற்கு நாள் குறிக்க சென்றாள்.
ஜாதகாரன் அந்த ஜாதகத்தை வாங்கி கொண்டு இவனுக்கு நாள் சரி இல்லை ... இவனுக்கு உங்கள் பிள்ளையை கட்டி வச்சா அவா வாலாவட்டியா வந்து இருப்பா....என்று சொல்லிவிட்டார் ....
கலாவின் அம்மா மனசு நொந்து நினைத்து கொண்டே நடந்து வந்து கொண்டே இருந்தாள் ....
வரும் வழியில் ஒரு வயதான பாட்டி கலாவின் அம்மாவை பார்த்தாள்......கலாவை பற்றி விசாரித்தாள் ....தன் பேரன் ஒருவன் வெளிநாட்டில் இருக்கிறான் . அவனுக்கு 50,000 சம்பளம் பொண்ண வெளிநாட்டிற்கே கூட்டிட்டு போயிருவான் ...அங்க அவன் ராஜா மாதிரி இருக்கான் .....இவள நல்ல பாத்துப்பான், நீ அவல கட்டி வை நாளைக்கு பையன கூட்டிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள் ...
கலாவின் அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டு
வீட்டுக்கு வருகிறாள் ...
கலா ஓடி வந்து அம்மா என்ன சொன்னாரு , கல்யாணம் எப்ப வச்சிக்கலாம் சொன்னாரு , சொல்லுங்க அம்மா என்று சொல்லுகிறாள் ....
இல்ல டி , உனக்கும் அவனுக்கும் பொருத்தம் இல்லையான் , சொல்லிடாரு , என்று சொல்லிகொண்டு நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க ...... சொல்லிகொண்டே கலாவின்அம்மா உள்நுழைகிறாள் ....
கலா ஒரு அறைக்குள் சென்று அழுது கொண்டே இருந்தாள் ........
மறுநாள் காலையில் தன் அம்மாவிடம் போய் அம்மா மாமனே கெட்டிவைங்கமா ப்ளீஸ் மா என்று கண்ணில் நீருடன் கேட்கிறாள் .....
இல்லடி ஜாதகம் பொருத்தம் இல்லடி பின்னாடி நீதான் கஷ்ட படுவ
அம்மா சொல்றத கேளுடி ......
மாப்பிள்ளை வீட்டுகாரங்க வருவாங்க ..அழகா அலங்காரம் பண்ணிட்டு வந்து நின்னு டி சொல்லிட்டு சமையல் அறைக்குள் செல்கிறாள் ....
தன் மொபைல் எடுத்து தன் மாமனுக்கு போன் செய்கிறாள் ......போன் எடுக்கவில்லை
தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் மாமனை பார்க்க சென்றாள் ....மாமன் அங்கு இல்லை ...அருகில் விசாரித்தாள்
மாமன் பம்பாய்க்கு செல்வதாகவும் , தன் அக்கா மகளை திருமணம் செய்ய பணம் சம்பாதிக்க போயிருப்பதாகவும் ,சொல்லிட்டு போனான் என்று ஒரு பாட்டி கலாவிடம் கூறினாள்....
தன் மாமன் எப்படியும் தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தாள் ....
ஆனால் தன் மாமன் வரவில்லை கட்டாயத்தின் காரணமாக வேறு திருமணம் செய்து கொண்டாள்
திருமணம் முடிந்து வெளி நாட்டிருக்கு சென்று 3 வருடம் கழித்து தன் சொந்த ஊருக்கு வந்தாள் ...
நடந்து கொண்டு வந்திருந்தாள்.......தூரத்தில் அவன் மாமன் உட்கர்ந்து கொண்டிருந்தான் ..........பழைய நினைவுகள் வந்தது .......அருகில் சென்றாள்
தன் இரண்டு கால்களையும் இழந்த தன் மாமாவை சந்தித்தாள்....
மாமா ! மாமா எப்படி இருக்கேங்க எப்படி உங்களுக்கு இப்படி என்று கேட்டாள் ....அதிர்ச்சியுடன்
அதற்கு அவன் உனக்கு திருமணம் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான் ....திருமணத்தை நிறுத்துவதற்கு ரயிலில் வந்தேன் ....ரயிலை விட்டு இறங்கும் போது கால் தடுமாறி என் இருகால்களும் நசுங்கி விட்டன .....(என் உயிரே சென்றுவிட்டது என் கால் போனால் என்ன மனதில் நினைத்து கொண்டான்( .....நீ எப்படி இருக்க
நான் நல்லாருக்கேன் , கணவனை அறிமுகம் செய்து வைத்தாள்....போயிட்டு வாரேன் என்று கூறி தன் வீட்டுக்கு சென்றாள் .......கொஞ்சம் தூரம் தள்ளி போன பிறகு திரும்பி பார்த்தாள் .......(கண்ணீர் துளியுடன் )
கருத்து : ஜாதகம் பார்த்து இருவர் மனதை பிரித்து விடாதிர்கள் ......ஜாதகம் ஒரு மூடநம்பிக்கை புரிந்துகொள்ளுங்கள் ......