அக்னிக்குஞ்சுகள்-3 இரத்ததால் ஒரு சரித்திரம் எழுதுகிறேன்

ஒட்டு மொத்த
மதத் தார்க்கும்
ஒரே சமயத்தில்
பிடித்த மனநோயால் எழுந்த ஒரு பித்தனின் கவிதை!சரித்திரத்தின்
கதை!

அந்த கிராமம் இன்னும் அழுகிறது!
நடுவே இழுக்கப்பட்ட
ஒரு சுண்ணாம்புகோடு
ஒரு வீட்டை இரண்டு
துண்டாக்குகிறது!
முன் பக்க வாசலில்
தலை கிடக்கிறது!
பின் பக்க வாசலில்
உடல் கிடக்கிறது!
.
மரணம் மட்டுமே
நிச்சயமென
அந்த கிராமத்தின்
கடலில், பிணங்கள்
மிதக்கிறது!

ஒரு பெண்ணின்
நெற்றிப்பொட்டு அழிக்கப்பட்டு
மார்பில்
பிறை நட்சத்திரம்
பொறிக்கப்பட்டது
அவள் ஒரு இந்துவென!

ஒரு பெண்ணின் பர்தா
பறிக்கப்பட்டு
அவள் அடிவயிற்றில்
சூலம் பொறிக்கப்பட்டது
அவள் ஒரு முஸ்லிமென!

ஒருவனின் தலைப்பாகை பறிக்கப்பட்டு
தலைமயிர் கத்தறிக்கப்பட்டது
அவன் ஒரு சீக்கியனென!

இப்படியாக
ஒருவனின் மதம்
இன்னொருவனால்
இழிவு செய்யப்பட்டது!

"பெண்ணை சித்திரவதை
செய்வதன் மூலம்
அவள் மதம் சாகும்
என்பது மதத்தின்
அடையாள மாக்கப்பட்டது "!!!

முலையை அறுத்து
இரத்தம் குடிப்பது
இறைமையின்
தத்துவம் என
மதப்புத்தகமும்
எழுதப்பட்டது!

கருத்தடை செய்யப்பட்ட
விதை மண்ணில்
புதைக்கப்பட்டது!
மண்ணில் புதைத்ததை
பிளந்தெடுத்து
மதமென அழைக்கப்பட்டது!
(தொடரும்)

எழுதியவர் : ருத்ரா (28-Dec-13, 11:12 pm)
பார்வை : 79

மேலே