வாழ்க செந்தமிழ்

பெரிய மனத்தான் பாரியகனே--நீ
அரிய குணத்தான் தாயின் மனனே!
நெறியெனக் கொண்டு நித்திய தமிழுக்கு
உரியன செய்து உயர்ந்தாய் வாழி!
விரிந்த எழுத்து நந்த வனத்தில்--நீ
புரிந்து தேடிக் கண்டது எப்படி?
குறியாய் கவனம் கொண்டும் எம்மை
சரியாய் தாயாய் தொடர்ந்தாய் உண்மை.
இத்தனை தமிழையும் எத்தனை நேரமோ!--நீ
முத்தி முகர்ந்தாய் அத்தனை அதிசயம்.
சத்தாய் தந்தாய் ஊக்கம் அருமை.
சத்தியம் உன்னால் தமிழுக்குப் பெருமை.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்புகழே!--நீ
வாழும் நாளெல்லாம் தமிழ் திருவருளே!
ஆழி சூழ் உலகும் அகன்று தமிழ் வாழ்க!
கோளிலா நாளும் கூடித் தமிழ் வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.