நன்றியுமில்லை

என்னை நடத்திச் சென்ற கால்கள்
தோய்ந்து நொந்து அழுகின்றன
ஏன் எந்த அழுமுஞ்சி ஆட்டம் ?
என்று சற்று கோபத்துடன் எண்ண
கால்களோ மேலே நடக்க மறுக்க
அவற்றை ஏளனத்துடன் நோக்கி
இரைந்தேன் சீற்றத்துடன்
என் வயதை மறந்து
கால்கள் செய்த தொண்டை மறந்து
வேகமாக நடந்த நாட்களை மறந்து
உலகத்தை சுற்றியதை மறந்து
பாராட்டத் தோன்றவில்லை
பழிக்கத் தோறுகிறது
மனித மனமே
உனக்கு ஈவில்லை
இரக்கமில்லை
நன்றியுமில்லை.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (28-Dec-13, 10:13 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 518

மேலே