வருத்தம் மிகுகிறது

நாகரிகமான இந்நாட்களிலே
செயல்கள் பல நாணச செய்ய
தலை குனிந்து செல்ல வேண்டிய போது
நாம் நிமிர்ந்து நடக்கிறோம் .

சுற்றுப்புறத தூய்மை அறவே நினையாமல்
எவ்விடத்திலும் காறித் துப்பி
நினைத்த் இடத்தில் இயற்கை உபாதைகளை கழி த்து
நாம் பெருமையுடன் நடக்கிறோம்.

கழிவுகளை அகற்றாமல் தெருவில் குவித்து
எதையும் எங்கு என்று பாராமல் எறி ந்து
அவற்றை எரித்து கரும் புகையை உண்டாக்கி
நாம் பெருமிதத்துடன் நடக்கிறோம்..

நமக்கு ஏன் இவ்வளவு பெருமை ?
நமக்கு எதற்கு இத்தனை மகிழ்ச்சி ?
நம்மை எண்ணினால் வருத்தம் மிகுகிறது
இருந்தும் நாம் தலை தூக்கி நடக்கிறோம்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (28-Dec-13, 9:20 pm)
பார்வை : 352

மேலே