புதுப்புறம் நானூறு 4
4.தாயில்லாக் குழந்தை
வாள் ரத்தக் கரைபட்டு
வானின் செந்நிற மாயிற்று
வாகை சூடப் போரிட்ட வீரரின்
வசந்தக் கால்கழல் கருநிற மாயிற்று
அம்பு பட்டதால் கேடயம் கூட
ஆயிரங் குழிகளும் போதலும் கண்டன
அருமை ரத்தத்தால் நனைக்கப்பட்ட
அந்த முகக்கருவி கொண்ட குதிரையும்
மானைக் கொன்று ரத்தம் குடிக்கும்
மாமிருகம் காட்டுப் புலிபோல் இருந்தது
மதில்கள் உடைத்து வந்து யானைகளுக்கு
மழுங்கிப் போயின கொம்புகளும் நன்றாய்
செம்மைக் கதிரவன் போல மன்னனே - நீ
செழித்த படைப்பெறுடன் திகழ்கிறாய்
செந்தமிழ் நாட்டில் உன்னை பகைத்திட
செருக்குடன் வரும் மன்னர்கள் நாடெல்லாம்
தாயைப் பிரிந்து துயர் உறும் குழந்தைபோல்
தவித்து துயரும் அடையும் ! இதுதான்
தாழ்வில்லா உனது சிறப்பு !
திணை : வஞ்சி
துறை : கொற்றவள்ளை
பாடியவர் : பரணர்
பாடப்பட்டவர் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
விவேக்பாரதி