என்னுள் ஒருவன்
என்னுள் ஒருவனாக நீ இருந்து
உன் எண்ணங்களாக நான் வாழ்ந்து
உன்னையே போற்றிப் புகழ்ந்து
பாட எம்பெருமானே ..நீ அருள்புரிவாயாக ..!!
ஏழுமலை தாண்டி குடியிருக்கும்
ஈரேழு உலகைக் காத்திருக்கும்
ஏழுமலையானே ...
பிறர்துயர் தீர்க்க நான் வாழ ..நீ அருள்புரிவாயாக..!!
பஞ்சம் பட்டினி குன்றி
ஜாதி ,மதங்கள் இன்றி
மக்கள் யாவரும் ஒன்றி
இன்புற்று வாழ சீனிவாசனே ..நீ அருள்புரிவாயாக.!!
அன்பாய் அணைத்திட அன்னையின்றி
ஆசையாய் அரவணைக்க தந்தைஇன்றி
வாடும் இளம்தளிர்கள்
என்றும் வாடாமல் மகிழ்வுடன்
வாழ வேங்கடேசனே ..நீ அருள்புரிவாயாக ..!!
பக்தர்கள் பல பெயர்
கூறி உன்னை அழைத்தாலும்
நான் அழைக்கின்றேன் ..அண்ணா
என்று உரிமையுடன் அன்பாய்
நீ வருவது நிச்சயம் என்றால்
என் வேண்டுதலுக்கு
செவி சாய்ப்பாய் என்றால்
நான் அழித்திடுவேன்
காணிக்கையாய்
என் வாழ்கையை
என்றும்...என்றென்றும்..