மாமாயன் மாதவன்

மாமாயன் மாதவன்


உருவாய் அருவாய்

ஒளியாய் ஒலியாய்

அணுவாய் அணுவின் அணுவாய்

நீராய் நெருப்பாய்

நிலமாய் விசும்பாய்

புல்லாய் நெல்லாய்

மரமாய் கொடியாய்

காயாய் கனியாய்

தாயாய் தந்தையாய்

உடலாய் உயிராய்

மனமாய் மதியாய்

எங்கும் எதிலும்

என்றும் நிறைந்தாய்

மாலே மாமணியே

மாதவா எந்தாய்

எந்தன் கருநீல திருமாலே

நீயே எனதெல்லாம்

என்னுள் நீ உன்னுள் நான்

என கண்டுகொண்டேன்

வேறென்ன வேண்டும் எனக்கு

எழுதியவர் : தமிழ்பித்தன் (30-Dec-13, 4:20 am)
பார்வை : 95

மேலே