பெயரிடாத நான்

மனதிலிருந்த வார்த்தையெல்லாம்
மடிந்துபோக

தொலைவிலிருந்து தூண்டிவிடுகிறாய்
தொலைந்து போக

நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்
நெருப்பாய் எண்ணங்கள்

பேச துடிக்கும் உதடுகள்
போக துடிக்கும் கால்கள்

தேடி தான் பார்க்கிறேன் - நான்
தேய்பிறை ஆனா பின் கூட

விதியின் வலியோ இல்லை
வீண் எண்ணம்மோ -நீ

விலகினாய் என்றெண்ணும்போது
விசிம்பித்தான் அழத்தோன்றுகிறது

எழுதியவர் : நிலா மகள் (30-Dec-13, 11:06 am)
பார்வை : 119

மேலே