பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
இரு இருக்கையில்
என் ஒருக் கை உனக்காய்
இடம் பிடித்து காத்திருக்க..
ஒவ்வொரு படியிலும்
நீ கால் வைக்க .
என் உடம்பில் உள்ள அத்தனை
முடிகளும் உன்னை நிமிர்ந்து பாக்கிறதே பயிங்கிளியே...!
உன் பாதங்கள் மெதுவாய்
என்னை நெருங்க
பாவனைகள் அற்று நான் நொருங்க..
ஆர்வமாய் கை வைத்து
கர்வமாய் காத்திருந்தேன்...பெண்ணழகே..!
சொவ்கிரியமாக நீ அமர
நாகரீகமாக ஜன்னல் ஓரம் நான் புகுர.
பரிகாரமாய் கடவுளுக்கு என் செய்வேன்
பாவை நீ என்னருகே அமர்ந்ததற்கு...!
மெல்லிய உன் பார்வை பட்டு
அள்ளிய என் ஆசைகள்
உன் வார்த்தைக்கு கட்டு பட்டு
என்னையே கட்டி போட்டு.
நானிருந்தாலும்..
கட்டி இழுக்கிறதே உன்னழகு ...!
உன் கைகள் என்னை நெருங்காதா
உன் தலை என் தோள் சாய்ந்து உறங்கதா .
இது அத்தனையும் இத்தருணம் நிகழாதா
என்ற நான் ஏங்க
மீண்டும் மீண்டும் உன் அழகில்
நான் மயங்க...சொக்கி போனேனே என்னழகே ..!
வேக தடை வந்ததும்
வேகமாய் நீ சாய.--பூரித்து போய்
வாழ்த்தினேன் ஓட்டுனரை
என் உயிரைக் காத்தமைக்கு...!
அவளுக்காய் இதுவரை காத்திருந்த
என் விழிகள் வேகத்தடை பக்கம் சென்றது..
இதுனாலோ இது நாளும் நிகழாதோ..!
ஜன்னல் ஓரம் மழை வந்த நேரம் .
தூரலில் தொலைந்து போயின
இயற்க்கை காட்சிகள்..
மெல்லமாய் அவள் பார்வையில்
விழுந்தன என் காட்சிகள்..!
ஜன்னல் ஓரம் ஒரே ஈரம்
மின்னல் வந்ததும் குறைந்தது தூரம்
இது இறைவன் கொடுத்த
இரண்டாவது வரம்.
வெளியே மழைத் துளிகள்
உள்ளே வியர்வைத் துளிகள்..!
தூரம் நேரம் குறைந்தது
சேரும் இடமும் வந்தது
கண்ணில் துளிகள் அரங்கேற
விண்ணின் துளிகள் மரமேற
கட்டி அணைத்து பிரிந்து கொண்டோம்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.
.