காதலென்னும் சோலையினில்30

வீட்டிற்குள் வந்ததும் கவிதா அத்தை எனக்கு தலைவலியா இருக்குது நான் கொஞ்சநேரம் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றாள்.


உள்ளே சென்றதும் கவிதாவுக்குள் பல எண்ணங்கள் தோன்றியது ராஜசேகரை என்ன பண்ணலாம் திருத்துவதா இல்லை? அந்த தாராவுடனே சேர்த்து வைத்து விட்டு நாம் ஏதாவது வேலை செய்து இந்த ஊரிலே வாழ்வோமா?பெற்றோரை நினைக்கும் போது வருத்தமாக தான் இருக்குது என்ன பண்ண எல்லாம் நம் விதி, அத்தை என்ன சொல்வாங்களோ? இப்டி பல எண்ணங்களுடன் படுத்தவள் தன் குழந்தையை கூட பார்க்காமல் அப்படியே தூங்கிவிட்டாள்.......




தாராவின் வீட்டில் ஒரு பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது...


அம்மா அத்தானை ஏமாற்றிவிட்டு அங்கு வந்திருக்கும் அந்த பெண்ணை உடனே அந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டும்..


ராஜலெக்ஷ்மியின் உதவியுடன் அவளை இந்த ஊரிலிருந்தே அனுப்பலாம் என்று பார்த்தால் அவளும் அவள் கூடவே சேர்ந்து என்னை மதிக்கவில்லை; தாரா அக்கா தாரா அக்கா என்று என் காலையே சுற்றி வந்த நாய் இன்று என்னை சீண்டி பார்க்கிறாள் உனக்கு இருக்குடி என்று சொல்லிவிட்டு.............



தன் அம்மாவிடம் அம்மா நீங்கள் என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது நான் அந்த வீட்டு மருமகள் ஆகவேண்டும்
ஏதாவது செய்யுங்கள் என்றாள்...........


நான் அத்தான் கூட சேரணும்னு எவ்ளோ மனக்கோட்டை கட்டி வச்சிருந்தேன் எல்லாம் வீணாபோயிருமோன்னு தோணுது அம்மா என்று கதறி அழுதாள்.................


அந்த கவிதாவை உங்களுக்கு இப்போது தான் தெரியும் அம்மா but எனக்கு 4ஆண்டுகளுக்கு முன்பே தெரியும்.


என்ன என்று ஆவேசமாக தாய் கேட்டாள்!!!!!!!!!!!

ஆம் அம்மா ஒரு முறை அவள் ராஜசேகரன் அத்தானை தேடி நம் ஊருக்கு வந்தாள் அந்த நேரம் எனக்கும் அத்தானுக்கும் திருமணம் என்று சொல்லி அவளை விரட்டி விட்டேன் அத்தானை பார்க்க எவ்ளோ முயற்சித்தாள் நான் தான் அனுமதிக்கவில்லை......


அவள் என்வாழ்வில் குறுக்கு வராமல் இருந்தால் நல்ல படியாக திருமணம் நடக்கும் என்றிருந்தேன் என் விதி மாமா போய் சேர்ந்திட்டாங்க திருமணமும் நிறுத்திவைக்கப்பட்டது......


அதுமட்டுமில்லாமல் கவிதாவிடமும் அத்தானைப்பற்றி ரொம்ப மோசமாக சொல்லி அனுப்பினேன் இருந்தும் இன்று அவள் என் அத்தானுடன் வந்து சேர்ந்து விட்டாள்............


.
எனக்கு அத்தான் வேணும் என்று கத்த...........
நிறுத்துடி என்று ஒரு குரல் கேட்க பதற்றத்துடன் திரும்பினார்கள் தாராவும் அவளுடைய அம்மாவும்?????????????

எழுதியவர் : (30-Dec-13, 11:29 am)
பார்வை : 261

மேலே